மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிவு!

1 Min Read

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

சேலம், அக்.08 மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்தைக் காட்டிலும் பாசனத்திற்கான திறப்பு அதிகமாக இருப்பதால், அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது. இன்று காலை 8 மணி நிலவரப்படி, மேட்டூர் அணைக்கான நீர்வரத்து விநாடிக்கு 848 கன அடியாக அதிகரித்துள்ளது. இருப்பினும், டெல்டா பாசனத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு விநாடிக்கு 15,000 கன அடியாக உள்ளது. நீர்வரத்தைக் காட்டிலும் பன்மடங்கு கூடுதல் நீர் திறக்கப்பட்டு வருவதால், அணையின் நீர்மட்டம் தற்போது 67.72 அடியாகக் குறைந்துள்ளது. தொடர்ந்து பாசனத்திற்கு நீர் திறக்கப்பட்டு வருவதால், அணையின் நீர் இருப்பு மற்றும் நீர்மட்டம் மேலும் சரிய வாய்ப்புள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *