முதலீடுகளில் பாதாளத்திற்கு போன தமிழ்நாடு!

2 Min Read

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

வாகன உற்பத்தி, மின்னணு சாதனங்கள், ஜவுளித் தொழில் எனப் பல துறைகளில் நாட்டின் முன்னணி மாநிலமாகத் திகழும் தமிழ்நாட்டிற்கு, அண்மையில் வெளியாகியுள்ள திட்ட முதலீட்டு புள்ளிவிவரங்கள் ஓர் எச்சரிக்கை மணியை அடித்துள்ளன.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் தொடங்கப்படும் புதிய திட்டங்கள் மற்றும் முதலீடுகள் தொடர்பான அண்மைக் காலத் தரவுகளின்படி, அதிக முதலீடுகளை ஈர்த்த முதல் 10 மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு இடம் பெறாமல் போனது பொருளாதார நிபுணர்கள் மற்றும் தொழில் துறையினர் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தவெக ஆட்சியில் தமிழ்நாடு முதலீட்டு ரீதியாக அதலபாதாளத்திற்கு சென்றுள்ளது.

முந்தைய காலாண்டில் (Q4-FY2026), தமிழ்நாடு 183 திட்டங்களுடன் சுமார் ரூ.44,036.71 கோடி மதிப்பிலான முதலீடுகளை ஈர்த்து, ஒட்டுமொத்த இந்திய அளவில் 5.1 சதவீதப் பங்களிப்புடன் ஆறாவது இடத்தில் இருந்தது. ஆனால், அடுத்த காலாண்டின் (Q1-FY2027) தரவுகளை உற்றுநோக்கும்போது நிலைமை தலைகீழாக மாறியுள்ளது.

அண்மை நிலவரப்படி, நாடு முழுவதும் மொத்தம் ரூ.14,76,531.33 கோடி மதிப்பிலான 3,871 புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் பிற மாநிலங்கள் பெரும் முதலீடுகளை வாரிச் சுருட்டியுள்ள நிலையில், தமிழ்நாடு முதல் 10 இடங்களுக்குள் கூட வர முடியாமல் வெளியே தள்ளப்பட்டுள்ளது:

மகாராட்டிரா மாநிலம் 748 புதிய திட்டங்களுடன் ரூ.8,02,350.76 கோடி முதலீட்டைப் பெற்று முதலிடத்தில் கோலோச்சுகிறது. நாட்டின் மொத்த முதலீட்டில் இது 54.34% ஆகும்.

ஆந்திரப் பிரதேசம் ரூ.1.12 லட்சம் கோடி முதலீடுகளுடன் (259 திட்டங்கள்) இரண்டாம் இடத்தையும், கருநாடகா ₹83,326 கோடி முதலீடுகளுடன் (400 திட்டங்கள்) மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளன.

ஒடிசா (ரூ.79,467 கோடி), உத்தரப் பிரதேசம் (ரூ.65,590 கோடி) ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

தேர்தல் சூழல் நிலவிய மேற்கு வங்கம் கூட 72 திட்டங்கள் மூலம் ரூ.34,003.65 கோடி மதிப்பிலான திட்டங்களைப் பெற்று 6ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. இதனைத் தொடர்ந்து குஜராத், ராஜஸ்தான், தெலங்கானா மற்றும் அரியானா ஆகிய மாநிலங்கள் முதல் 10 இடங்களை நிறைவு செய்துள்ளன.

ரூ.21,419 கோடி முதலீட்டைப் பெற்ற அரியானா 10-ஆம் இடத்தில் உள்ள நிலையில், தமிழ்நாடு இந்த அளவிற்குக் கூட முதலீடுகளைப் பெற முடியாமல் டாப்-10 பட்டியலிலிருந்து விடுபட்டிருப்பது கவலை அளிக்கும் விஷயமாக மாறியுள்ளது.

தமிழ்நாடு போன்ற பெரும் தொழில் பின்புலமும், படித்த இளைஞர் பட்டாளமும் கொண்ட ஒரு மாநிலம், புதிய முதலீட்டு திட்டங்களில் பின்தங்குவது எதிர்கால வேலைவாய்ப்புகளைப் பெரிதும் பாதிக்கும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

ஒரு மாநிலத்தில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் புதிய தொழிற்சாலைகள், பாலங்கள், துறைமுகங்கள், மின்சாரத் திட்டங்கள் அல்லது தகவல் தொழில்நுட்ப பூங்காக்களை அமைக்கும்போதுதான்:

இளைஞர்களுக்குப் புதிய நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகும்.

மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GSDP) உயரும். சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்குப் (MSME) புதிய ஆர்டர்கள் கிடைக்கும்.

இந்தியாவின் 1 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை தமிழ்நாடு அடைய வேண்டுமெனில், முதலீட்டுப் பட்டியலில் தொடர்ந்து டாப்-3 இடங்களுக்குள் இருக்க வேண்டியது கட்டாயம். எனவே, தமிழ்நாடு அரசு உடனடியாக உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீட்டை உயர்த்தி, தேக்கமடைந்துள்ள பணிகளை வேகப்படுத்தி, மீண்டும் புதிய முதலீடுகளை ஈர்க்கும் மய்யமாகத் திகழ நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *