சந்திரனில் 4 மில்லியன் ஆண்டுகள் பழைமையான ஆஸ்ட்ரேல் படுகை கண்டுபிடிப்பு

1 Min Read

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

கடந்த 2008ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில், நிலவைச் சுற்றி வந்து ஆய்வு செய்வதற் காகச் ‘சந்திராயன் 1’ விண்கலத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) செலுத்தியது.

நாசா உள்ளிட்ட அனைத்துலக விண்வெளி அமைப்புகளின் ஆறு அறிவியல் கருவிகள் உட்பட மொத்தம் 11 ஆய்வுக் கருவிகளுடன் விண்ணுக்கு அனுப்பப்பட்ட அந்த விண்கலம், நிலவின் மேற்பரப்பில் நீரும் ஹைட்ராக்சில் மூலக்கூறுகளும் இருப்பதை உறுதிசெய்தது.

அதனைத் தொடர்ந்து ஏவப்பட்ட ‘சந்திராயன் 3’ திட்டத்தின் மூலம், நிலவின் மேற்பரப்பில் அதிக அளவிலான மெக்னீசியம் கனிமம் இருப்பது கண்டறியப்பட்டது. மேலும், அவ்விடத்தில் விண்கல் மோதலால் உருவான ஏறத்தாழ 300 பள்ளங்கள் இருப்பதாகக் கருதப்படுகிறது. எனினும், இதுவரை அதுபோன்று 74 பள்ளங்கள் மட்டுமே அதிகார பூர்வமாகக் கண்டறியப்பட்டுள்ளன.

‘சந்திராயன் 1’ விண்கலம் சேகரித்த கனிமவியல் தரவுகளைப் பயன்படுத்தி, நிலவில் கண்களுக்குப் புலப்படாமல் மறைந்திருந்த ‘ஆஸ்ட்ரேல் படுகை’ எனப்படும் விண்கற்கள் மோதல்களால் உருவாகும் படுகையின் இருப்பை அகமதாபாத்தில் உள்ள இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகத்தைச் சேர்ந்த இந்திய ஆய்வாளர்கள் தற்போது உறுதிசெய்துள்ளனர்.

அந்த ஆஸ்ட்ரேல் படுகையின் விளிம்புகளில் அடிக்கடி அரிப்பு ஏற்படுவதன் காரணமாக, விண்வெளித் தொலைநோக்கிகளால் இதுவரை அதனைத் துல்லியமாகக் கண்டறிய முடியாமல் இருந்தது. நிலவின் தென்கிழக்கு அரைக்கோளத்தில் அமைந்துள்ள ஆஸ்ட்ரேல் படுகையானது, நான்கு மில்லியன் ஆண்டுகளுக்குமேல் பழமையானதாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *