‘ஆப்டோஜெனெடிக்ஸ்’ கண்டுபிடிப்புக்காக அறிவியலர் மூவருக்கு மருத்துவ நோபல் பரிசு!

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

சென்னை, அக்.06- ‘ஆப்டோ ஜெனெடிக்ஸ்’ தொடர்பான கண்டு பிடிப்புகளுக்காக, கார்ல் டீசெரோத், பீட்டர் ஹெகமன் மற்றும் ஜார்ஜ் நாகல் ஆகிய 3 விஞ்ஞானிகளுக்கு 2026-ஆம் ஆண்டுக்கான மருத்துவ நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

நரம்பு செல்களைக் கட்டுப்படுத்த ஒளியைப் பயன்படுத்தும் ‘ஆப்டோ ஜெனெடிக்ஸ்’ முறை தொடர்பான ஆய்வுக்காக கார்ல் டீசெரோத், பீட்டர் ஹெகமன் மற்றும் ஜார்ஜ் நாகல் ஆகியோருக்கு 2026-ஆம் ஆண்டின் மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட மூளைச் சுற்றுகள் எவ் வாறு நினைவுகள், உணர்வுகள் மற்றும் நடத்தைகளை வடிவமைக்கின்றன என்பதை ஆராய இம்முறை உதவு கிறது.

‘ஆப்டோஜெனெடிக்ஸ்’

கிளமிடோமோனாஸ் (Chlamydomonas) எனப்படும் ஒற்றை செல் பாசி குறித்து ஹெகமன், நாகல் ஆகியோர் ஆய்வு செய்தனர். அவர்கள் அந்தப் பாசியின் மேற்பரப்பில் ‘சேனல்ரோடாப்சின்’ (channelrhodopsin) எனப்படும் புரதத்தைக் கண்டறிந்தனர். நீல நிற ஒளி படும்போது, இந்தப் புரதம் ஒரு பாதையைத் திறக்கிறது; அதன் வழியாக மின்னூட்டம் பெற்ற துகள்கள் பாய்ந்து, மின் சமிக்ஞையை உருவாக்குகின்றன.

பின்னர், டீசெரோத் ‘சேனல் ரோடாப்சின்’ புரதத்துக்கான மரபணுவை எலிகளின் நரம்பு செல் களுக்குள் செலுத்தினர். அவற்றின் மீது நீல நிற ஒளியைச் செலுத்துவதன் மூலம், நரம்பு சமிக்ஞையைத் தூண்ட முடிந் தது. இத்தொழில்நுட்பம் ‘ஆப்டோஜெனெடிக்ஸ்’ என்று அழைக்கப்படலானது.

இந்த முறையானது ஒளியைப் பயன்படுத்தி குறிப்பிட்ட நரம்பு செல்களைச் செயல்படுத்தவும், குறிப்பிட்ட நினைவுகள், உணர்வுகள் மற்றும் நடத்தைகளில் அவற்றின் பங்கை ஆராயவும் வழிவகுக்கிறது. பார்வைக் குறைபாடு உள்ளவர்களின் பார்வையை மீட்டெடுக்கும் முயற்சி களிலும் இதன் பயன்பாட்டை ஆராய்ச் சியாளர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.

ஆல்பிரட் நோபலின் உயி லின்படி, மனிதகுலத்துக்கு முக்கியப் பங்களிப்பை வழங்கும் கண்டு பிடிப்புகளுக்காக 1901-ஆம் ஆண்டு முதல் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. 2026-ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுத் தொகை 11.5 கோடி ரூபாயாகும். இந்தத் தொகை மூன்று வெற்றியாளர்களுக்கும் சமமாகப் பிரித்து வழங்கப்படுகிறது.

மருத்துவ நோபல் பரிசு, கரோ லின்ஸ்கா நிறுவனத்தில் உள்ள 50 பேராசிரியர்களைக் கொண்ட நோபல் குழுவால் தேர்ந்தெடுக்கப்படுகிறது. ஸ்டாக்ஹோம் நகருக்கு அருகிலுள்ள சோல்னாவில் உள்ள கரோலின்ஸ்கா நிறுவனத்தின் நோபல் அரங்கில் இந்த விருது அறிவிக்கப்பட்டது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *