ராணிப்பேட்டை மாவட்டத்தில் திராவிடர் கழக மகளிரணி, மகளிர் பாசறை சார்பாக குடும்ப விழா

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

சம்பத்துராயன்பேட்டை. அக்.6- ராணிப்பேட்டை மாவட் டம் சம்பத்து ராயன்பேட்டையில் 26.9.2026 அன்று காலை 10.00 மணி முதல் மாலை 5.00 வரை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் குடும்ப விழா மிகச்சிறப்பாக நடந்தது.

நிகழ்விற்கு சிறப்பு அழைப் பாளர்களாக பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், தகடூர் தமிழ்ச் செல்வி மாநில மகளிரணி செயலாளர், ந.தேன்மொழி மாநில மகளிரணி துணை செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்படைய வைத்தனர்.

காலை 9 மணிக்கு தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து முழக்கமிட்டு அங் கிருந்து ஊர்வலமாக குடும்பவிழா நடைபெறும் மண்டபத்திற்கு வந்தவுடன் விழா தொடங்கியது.

நிகழ்வில் மகளிர் அணி மகளிர் பாசறை சார்பாக மாணவச் செல்வங் களுக்கும் மகளிர் தோழர்களுக்கும் விளை யாட்டுப் போட்டிகள் நடத்தப் பட்டன.. பகுத்தறிவு நாடகங்கள் மாணவர்களால் நடத்தி காட்டப் பட்டன.

மாநில மகளிர் அணி துணைச் செயலாளர் தேன்மொழி மகளிர் தோழர்களுக்கு நடை பயணப் போட்டியும், நினைவை ஒருமுகப்படுத்தும் திறன் போட்டி யும், பெரியார் பிஞ்சுகளுக்கு ஓட்டப்பந்தய போட்டியும்  நடத்தினார்.

மாநில மகளிர் அணிச் செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி பெரியார் பிஞ்சுகளுக்கும் மாணவர்களுக்கும், கணித வாய்ப் பாட்டு திறன் போட்டி, குழுவாக ஒருங்கிணைந்து செயல்படுதலின் திறன் வெளிப்பாட்டு போட்டி ஆகிய போட்டிகளை நடத்தினார்.

தகடூர் தமிழ்ச்செல்வியின் உருவாக்கத்தில் “பிரதமர் மோடியே வந்தாலும்”, “அவள் ஒரு விதவை”, “உங்கள் ரத்தம் என்ன குரூப்?” ஆகிய இரண்டு நிமிட நாடகங்கள் மாணவர்களால் நடத்தப்பட்டது.

இது சாத்தியமா?  என்ற தலைப்பில், தகடூர்  தமிழ்செல்வி ஒரு குட்டிக் கதையை மகளிர் தோழர்களுக்கு சொல்லி விவாதம் நடத்தப்பட்டது.

11 மணிக்கு பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் வருகைபுரிந்தார். தொடர்து விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் குறிப்பாக தங்கள் திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களை பாராட்டி உற்சாகமூட்டினார்.

சுமார் 2 மணி நேரம்  மாண வர்கள், மகளிரிடம் கேள்விகள் கேட்டு உற்சாகப்படுத்தியதோடு சிறப்பான கலந்துரையாடலாக விழாவை மெருகேற்றினார்.

மதிய உணவினை ஆற்காடு கோ.வினாயகம் வழங்கினார். இரா.நந்தன் திருமணமண்டபம் ஏற்பாடு செய்தார். மாவட்ட கழகத் தலைவர் சு.லோகநாதன் நிகழ்ச்சியை சிறப்பாக ஒருங்கி ணைத்தார். காஞ்சி மாவட்டக் கழகத் தலைவர் அ.வெ.முரளி முழு நிகழ்வையும் நெறிப்படுத்தினார். காஞ்சி மாவட்டச் செயலாளர் கி.இளையவேல், அவரின் மகன் இ.ரவீந்திரன், தோழர்கள் எல்லோரின் ஒத்துழைப்போடு குடும்ப விழா மாலை 3.30 மணியளவில் நிறைவடைந்தது.

பு.எல்லப்பன், செ.கோபி, சொ.ஜீவன்தாஸ், கோ.சூரியகுமார், சிங்கப்பூர் சங்கர், அவரின் மகள், லோ.செல்வி, விமலா, கவிதா, ஷியாமலா, க.தங்கராஜ், சு.வேலு, லட்சுமணன், திருவள்ளூர் மாவட்ட ப.க. பொறுப்பாளர் சி.நீ.வீரமணி, கெ.ஆறுமுகம், அவரின் மகன் ஆ.அமுதன், ஊராட்சி மன்ற தலைவர் ஜோதிஅருணாச்சலம், அ.கைலாசம், பொன்.வெங்க டேசன், க.தீனதயாளன், ஏ.ஞானப்பிரகாசம், க.ஆனந்தன், க.சு.பெரியார்நேசன், புளியங் கன்னு தேவராஜ், அவரின் மகள் வழக்குரைஞர் தே.தமிழ ரசி, சிப்காட் ராஜாசார், தி.க.சின்ன துரை, மற்றும் ஏராளமான மகளிர், பொதுமக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

நிகழ்ச்சியின் சிறப்பு கலந்து கொண்ட அத்தனை பெரியார் பிஞ்சுகளும் மாணவ மாணவிகளும் உற்சாகத்தோடு எல்லா நிகழ்ச்சிகளிலும் பங்கு கொண்டார்கள்.

போட்டிகள் நடத்த அவர்கள் அழைக்கப்பட்ட போது, போட்டி போட்டுக் கொண்டு கலந்து கொண்டார்கள். எந்தவித தயக்கமும் பயமும் காட்டவில்லை. குறிப்பாக நம்முடைய பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்க ளோடு மிகவும் இயல்பாகவும் உற்சாகத்தோடும் கலந்து கொண் டனர். நிகழ்ச்சி முடியும் வரை இருந்தார்கள்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *