டெனிலிக்ளிப்டின் – சர்க்கரை நோய் மருந்து அட்டையில் பக்கவிளைவைக் குறிப்பிட வேண்டும்! தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தல்

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

சென்னை, அக். 6- தோலில் அரிப்பு, நீர் கொப்பளங்கள் ஏற்படலாம் என்பதால் சர்க்கரை நோய்க்கான டெனிலிக்ளிப்டின் மருந்து அட்டையில் பக்கவிளைவு எச்சரிக்கையை குறிப்பிட வேண்டும் என்று ஒன்றிய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

சர்க்கரை நோய் டைப் 2-க்கு மெட்ஃபார்மின், சிடாக்ளிப்டின், செமகுளூடைன், டெனிலிக்ளிப்டின் போன்ற பல்வேறு மருந்துகள் பரிந்துரை செய்யப்படுகின்றன. மருந்துகளின் பக்கவிளைவுகள் குறித்து ஆய்வு செய்யும் நடவடிக்கைகளை ஒன்றிய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு மேற்கொண்டு வருகிறது.

அதன்படி, டெனிலிக்ளிப்டின் என்ற மருந்தை உட்கொண்டவர்களுக்கு காணப்பட்ட பாதிப்புகள் ஆய்வு செய்யப்பட்டன. அதில் புல்லஸ் பெம்பிகாய்டு என்ற நோய், அந்த மருந்தால் அரிதாக ஏற்படுவது தெரியவந்தது. இந்நோயால் ஏற்படும் தோலில் அரிப்பு, வலியுடன் கூடிய நீர் கொப்புளங்கள் ஏற்படுவது குறித்து, மருத்துவ நிபுணர்கள் குழு ஆலோசனை நடத்தி, நாடு முழுவதும் விற்பனை செய்யப்படும் டெனிலிக்ளிப்டின் மருந்துகளின் அட்டையில் புல்லஸ் பெம்பிகாய்டு பாதிப்பை பக்கவிளைவாக சேர்க்க வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டது.

வழிகாட்டுதல்கள்: அதனை ஏற்று, ஒன்றிய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் தலைவர் மருத்துவர் ராஜீவ் சிங் ரகுவன்ஷி வெளியிட்ட சுற்றறிக்கையில், “நாடு முழுவதும் உள்ள மாநில மருந்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகளும் டெனிலிக்ளிப்டின் மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு நிபுணர் குழுவின் பரிந்துரையை அமல்படுத்துவதற்குரிய வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும். அந்த மருந்தின் விளம்பரங்கள் மற்றும் மருந்தின் அட்டைகளில் புல்லஸ் பெம்பிகாய்டு ஒரு பக்க விளைவு என்பதை குறிப்பிடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு

மதுக்கடைகளுக்கு முக்கியத்துவம் –
இயற்கைப் பாதுகாப்புக்கு அலட்சியம் ஏன்?

தமிழ்நாடு அரசுக்கு
உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி!

மதுரை, அக்.6- மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள பழைமையான எச்சங்களை கொண்ட ஓணான் கரடு மலையில் கல் குவாரி செயல் பாட்டுக்கு தடை கோரி உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தொடரப்பட்ட வழக்கு. அரசு மதுக் கடைகளைப் பாதுகாக்கக் காட்டும் அக்கறையை பதில் மனு தாக்கல் செய்வதில் காட்டுவதில்லை – நீதிபதிகள் வேதனை.

நம்மாழ்வார் இயற்கை பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் பெத்தணன், மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:

“நான் இந்திய ராணுவத்தின் முன்னாள் படைவீரர் பேரையூர் தாலுகா எஸ்.பாப்பிநாய்க்கன்பட்டி, சங்கரலிங்கபுரம் கிராமங்களுக்கு அருகில், சலுப்பென் கரடு, ஓணான் கரடு மற்றும் பெருமாள் மலை ஆகிய அமைந்துள்ளது. இதில் ஓணான் கரடு எனப்படும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த குன்று உள்ளது. இந்த மலை பண்டைய காலத்தில் வாழ்ந்த மனிதர்களின் வாழ்விடங்களையும், புதைக்கும் முறைகளையும் சுட்டிக்காட்டும் பல தொல் பொருள், வரலாற்று, பண்பாட்டு எச்சங்களை கொண்டது இப்பகுதி குறிப்பிடத்தக்கது எனவே இயற்கை முக்கியத்துவம் வாய்ந்து இருக்கிறது. இந்த மலை இயற்கையான நீர்ப்பிடிப்பு மற்றும் நிலத்தடி நீர் செறிவூட்டும் அமைப்பின் ஒருபகுதியாக உள்ளது. மலையின் இயற்கை நீர் வளங்கள் மற்றும் அதன் நீர்ப்பிடிப்பு பகுதிகளை சார்ந்தே அப்பகுதி கிராமங்கள் உள்ளன.

இப்பகுதியில் பழங்காலக் கட்டுமானங்கள், கல் எச்சங்கள், பழங்கால உருக்கு உலை, முதுமக்கள் தாழிகள், சிற்பங்கள், கல்வெட்டுகள், குறியீடுகள் மற்றும் பிற தொல்லியல் பொருட்கள் உள்ளிட்ட பல் வேறு பழங்கால எச்சங்கள் கண்டறியப்பட்டு உள்ளன. இவை சுமார் 2,000 முதல் 3,000 ஆண்டுகள் பழைமையானவை என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் இந்த மலையில் கல் குவாரி நடத்த அனுமதிக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி இந்த பகுதியில் கல் குவாரி செயல்பட்டால் பழைமையான எச்சங்கள் அனைத்தும் அழிக்கப்படும். எனவே தொல்லியல் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் கொண்டதும், பல்லுயிர் வளத்தை கொண்டுஇருக்கும். ஓணான் கரடு மலையில் குவாரி நடத்த அனுமதிக்கக் கூடாது என உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனு வில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நேற்று (5.10.2026) நீதிபதிகள் வேல்முருகன், நீதிபதி ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கோரப்பட்டது. அப்பொழுது நீதிபதிகள்.. அரசு மதுக் கடைகளை பாதுகாக்கக் காட்டும் அக்கறையை பதில் மனு தாக்கல் செய்வதில் காட்டுவதில்லை. மதுக்கடைகள் பாதுகாப்பதை விட மலைகளை பாதுகாப்பது முக்கியம் இயற்கை வளங்கள் சுரண்டப்பட்டால் திரும்பக் கிடைக்குமா? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள் அரசு தரப்பில் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்தி வைத்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *