கொல்கத்தா, அக் 06 மேற்குவங்க மாநிலம் சிலிகுரி நீதிமன்றத்தில், ஹிஜாப் அணிந்து அமர்ந்திருந்த பெண் நீதிபதியைப் பார்த்துக் குற்றம் சாட்டப்பட்ட நபர் ஒருவர் ‘ஜெய் சிறீராம்’ முழக்கம் எழுப்பிய நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற் படுத்தியுள்ளது.
கொலை வழக்கு
சிலிகுடி நீதிமன்றத்தில் விசாரணைக்காக கொலை வழக்கு ஒன்று வந்தது அப்போது குற்றம் சாட்டப்பட்ட நபர் விசா ரணைக்கு அழைக்கப் பட்டார் இந்த நிலையில், நீதிபதியின் இருக்கையில் அமர்ந்திருந்த இசுலாமிய பெண் நீதிபதியைக் கண்டதும் திடீரென ‘ஜெய் சிறீ ராம்’ என்று கத்தியுள்ளார். நீதிமன்ற வளாகத்தில் இந்நிகழ்வு உடனடியாக அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிகழ்வு குறித்துப் பேசிய குற்றம் சாட் டப்பட்ட நபரின் வழக் குரைஞர் தரிதீபக் சாஹா, நீதிமன்றத்தில் உடனடியாக நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார். அந்த நபர் குறிப்பிட்ட நீதிபதியை இலக்காகக் கொண்டு வேண்டுமென்றே இம் முழக்கத்தை எழுப்ப வில்லை என்றும், அறியா மையால் தற்செயலாகவே இது நிகழ்ந்துவிட்டதாகவும் அவர் விளக்கம் அளித்தார்.
நீதிமன்றத்தின் மாண் பையும் ஒழுக்கத்தையும் சீர்குலைக்கும் வகையில் நடந்து கொண்ட இச்செயலுக்கு சிலிகுரி பார் அசோசியேஷன் கடும் கண்டனம் தெரி வித்துள்ளது. சங்கத்தின் தலைவர் உதயசங்கர் மால்காரர், இது போன்ற செயல்கள் நீதித்துறையின் கண்ணியத்திற்கு எதிரா னது என்று குறிப்பிட்டார்.
