திருநெல்வேலி, அக் 04- நெல்லை மாவட்டம் ஆச்சியூர் கிராமத்தில் ‘அரிஜன் காலனி’ என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்த இடம் ‘பெரியார் நகர்’ எனப் பெயர் மாற்றி கல்வெட்டு திறக்கப்பட்டுள்ளது.
2024 நவம்பரில் அங்கு நடந்த கிராம சபையில் ஜாதிப் பெயரை நீக்க வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அரசாணையும் வெளியானது.
இதற்கு எதிராக மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்குத் தொடரப்பட்டதால் பெயர் மாற்ற நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்தது.
இந்நிலையில் இந்த மனு நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், சக்திவேல் ஆகியோர் முன்பு நடந்த விசாரணையில் (23.09.2026) ‘‘தமிழ்நாட்டில் உள்ள சாலைகள், தெருக்கள், குடியிருப்புப் பகுதிகள் மற்றும் நீர்நிலைப் பகுதிகளுக்கு உள்ள ஜாதிப் பெயர்களை நீக்கத் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டதில் தவறு இருப்பதாக தெரியவில்லை எனத் தீர்ப்பளித்தனர்.
இதன்பிறகு ஜாதிப் பெயர்களை உடனடியாக நீக்கிவிட்டு மாற்றுப் பெயர்களைச் சூட்டுமாறு தாழ்த்தப்பட்ட, பழங்குடியின ஆணையத் தலைவர் இமயம், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பினார்.
இதன் தொடர்ச்சியாக ‘அரிஜன் காலனி’ என்றிருந்த இடத்தில் ‘பெரியார் நகர்’ பெயர் மாற்றி கல்வெட்டு திறக்கப்பட்டுள்ளது.
