ஈரோட்டில் ‘பெரியார் கேட்கும் கேள்விகள்’ நூல் வெளியீட்டு விழா

1 Min Read

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

ஈரோடு, அக்.4- ஈரோடு பெரியார் பெருந்தொண்டர் பெரியார் படிப்பக வாசகர் வட்டப் புரவலர் ஈரோடு ப.சம்பத்குமாரின் 80ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா மற்றும் “பெரியார் கேட்கும் கேள்விகள்” நூல் வெளியீட்டு விழா சிறப்பான முறையில் 01-10-2026 அன்று காலை 9.00 மணியளவில் ஈரோடு பெரியார் மன்றத்தில்சிறப்பாக நடைபெற்றது.
பெரியார்- அண்ணா நினைவு இல்லத்தில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கும், அறிஞர் அண்ணா சிலைக்கும் பிறந்தநாள் விழா நாயகர் சம்பத்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர் நிகழ்வாக, திராவிடர் கழகம் சார்பில் தலைமைச் செயற்குழு உறுப்பினர் ஈரோடு த.சண்முகம் பெரியார் சிலை வழங்கி – பயனாடை அணிவித்து பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்தார். தொடர்ந்து பேராசிரியர் ப.காளிமுத்து தி.மு.க மாநில மாணவரணிச் செயலாளர் வீரமணி ஜெயக்குமார், பொதுக்குழு உறுப்பினர் கோ.பாலகிருட்டிணன், மாவட்டக் காப்பாளர் இரா.நற்குணன், மாவட்ட துணைத் தலைவர் வீ.தேவராஜ், பத்திரிகையாளர் மகேந்திரன் ஆகியோர் விழா நாயகருக்கு பயனாடை அணிவித்து வாழ்த்துகளைத் தெரிவித்தனர். அதன் தொடர்ச்சியாக விழா நாயகர் சம்பத்குமார் “பெரியார் கேட்கும் கேள்விகள்? என்ற நூலை வெளியிட அதனை திமுக மாநில மாணவரணி செயலாளர் வீரமணி ஜெயக்குமார் பெற்றுக்கொண்டார். இந்த நிகழ்ச்சிக்கு மாவட்டக் காப்பாளர் இரா.நற்குணன், பொதுக்குழு உறுப்பினர்கள்
கோ.பாலகிருஷ்ணன், கு.சிற்றரசு, கோ.திருநாவுக்கரசு, ப.ரத்தினசாமி, தே.காமராஜ், தமிழ்ச்செல்வன், ராஜேஸ்வரி, மாலதி பெரியசாமி, கயல்விழி, ஜீவரத்தினம், பெரியசாமி, கி பிரபு, ப.சத்தியமூர்த்தி, பொறியாளர் வீரமணி, தனமே நீ, ஈழவேணி, குணசுந்தரி, வினோதன், கீர்த்தனா. செல்வம், பிரபு, புதிய தோழர் வழக்குரைஞர் கிரிதரன், சிவக்குமார், இனியன், செல்வம், பிரவின் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். புத்தக வெளியீட்டு விழா மற்றும் பிறந்தநாள் விழாவிற்கு வருகை தந்த அனைவருக்கும் சம்பத் குமார் காலைச் சிற்றுண்டி வழங்கினார். ‘விடுதலை’ ஆண்டுச் சந்தா ரூபாய் 2000 வழங்கினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *