நாகர்கோவில், அக்.4- தந்தை பெரியாரின் 148ஆம் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி மற்றும் ஓவியப் போட்டி நாகர்கோவில் அய். இ. எல். சி பள்ளியில் நடைபெற்றது. பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் உ.சிவதானு தலைமை தாங்கினார் திராவிடர் கழக மாவட்ட தலைவர் மா.மு.சுப்பிரமணியம் மாவட்டக் காப்பாளர் ம.தயாளன், துணைத் தலைவர் ச. நல்லபெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திராவிடர் கழக மாவட்டச் செயலாளர் கோ.வெற்றிவேந்தன் தொடங்கி வைத்தார். பள்ளி முதல்வர் சாந்தி போட்டியினை ஒருங்கிணைத்தார். ஏராளமான மாணவ மாணவியர்கள் போட்டியில் கலந்து கொண்டு பேசினர். பெரியார் படம் வரைந்தனர்.
வைக்கம் போராட்டத்தில் தந்தை பெரியார், பெரியாரின் பெண்ணுரிமைச் சிந்தனைகள், பெரியார் எனும் உலகத் தலைவர், சுயமரியாதை இயக்கத்தில் அனைவருக்கும் அனைத்தும், தமிழுக்கு தந்தை பெரியாரின் பங்களிப்பு, என்றும் தேவை பெரியார் போன்ற தலைப்புகளில் போட்டி நடைபெற்றது.
பகுத்தறிவாளர் கழக மாவட்டச் செயலாளர் பெரியார் தாஸ் நன்றி கூறினார்.
கழக வழக்குரைஞர்
மு.ஆனந்த முனிராசனுக்கு வாழ்த்து

திண்டுக்கல், அக்.4- தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் குழு நிர்வாகிகள் தேர்தலில் (2026-2029) பொதுச் செயலாளராக வெற்றி பெற்ற திராவிட கழக திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் வழக்குரைஞர் மு.ஆனந்த முனிராசன் வெற்றி பெற்றார்.
அவருக்கு திராவிட கழக மாவட்டத் தலைவர் இரா.வீரபாண்டியன், துணைத் தலைவர் த.கருணாநிதி, சட்டக்கல்லூரி மாணவர் மு.அன்புச்செல்வன், ரவிச்சந்திரன் ஆகியோர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
