கோயில் குடமுழுக்கு போன்ற நிகழ்ச்சிகளில் ஜாதி ரீதியாக அரசியல் செய்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்!

2 Min Read

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை, அக்.3 மனுதாரரின் சமூகத்தைத் தவிர வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கோயில் குடமுழுக்கு விழாவில் பங்கேற்பதில் இருந்து தடுக்கப்பட்டால், காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுத்து அத்தகைய விஷமச் செயலை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.
பெரம்பலூரில் உள்ள சிறீ மதுரகாளி அம்மன் கோயில், சிறீ கருப்பன்னசாமி, சிறீ பெரியசாமி மற்றும் சிறீ பரிவார தேவதை கோயில் குடமுழுக்கு வரும் அக். 25 ஆம் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டது. இக்கோயிலை சிறீ மதுர காளியம்மன் பொது அறக்கட்டளை நிர்வாகம் நிர்வகித்து வருகிறது. பல ஆண்டுகளாக புனரமைப்பு செய்யப்படாமல் இருந்த பணிகள் கடந்த 2018 ஆம் ஆண்டில் தொடங்கி, தற்போது நிறைவடையும் நிலையில் உள்ளது.
இந்த கோயில்களுக்கு வரும் அக் 25ஆம் தேதி குடமுழுக்கு நடத்த அறங்கவலர்கள் குழு திட்டமிட்டுள்ளது. மேலும், குடமுழுக்குத் தங்களது அறக்கட்டளை மட்டுமே நடத்த வேண்டும் என பெரம்பலூர் மாவட்ட நீதிமன்றத்தில் அனுமதி பெறப்பட்டுள்ளது. அதனால், மற்ற சமுதாயத்தினர் இடையூறு இல்லாமல் குடமுழுக்கைப் பாதுகாப்பாக நடத்த காவல்துறை பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என, அரியலூரைச் சேர்ந்த மகேந்திரன், சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
அந்த வழக்கு நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அறநிலையத்துறை சார்பில், சம்மந்தப்பட்ட கோயில் எந்தத் தனியாருக்கும் சொந்தமானது இல்லை. கடந்த 1976 ஆம் ஆண்டு முதல் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் கோயில் இருந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து, ஜாதி, மதம், மற்றும் நிறத்தின் அடிப்படையில் விழாவில் பங்கேற்பதில் இருந்து யாரும் தடுக்கப்பட மாட்டார்கள். தாழ்த்தப்பட்ட மற்றும் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்களும் குடமுழுக்கில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என மனுதாரர் தரப்பில் உத்திரவாதம் அளிக்கப்பட்டது.
இதனையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதி, கோயில் மீது யாரும் உரிமை கேட்கவில்லை. கோயிலைப் புனரமைத்து குடமுழுக்குச் செய்ய மட்டுமே அனுமதி கேட்கப்பட்டுள்ளது. அதனால், குடமுழுக்கின்போது ஜாதி, மதம், மற்றும் நிறங்களின் அடிப்படையில் யாரும் தடுக்கப்படாமல், அனைவரும் பங்கேற்பதை அறநிலையத்துறை உறுதிப்படுத்த வேண்டும்.
மனுதாரரின் சமூகத்தைத் தவிர வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்களை, மனுதாரரால் அல்லது அறங்காவலர்களால் குடமுழுக்கு விழாவில் பங்கேற்பதில் இருந்து தடுக்கப்பட்டால், காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுத்து, அத்தகைய விஷமச் செயலை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். கோயில் வளாகத்தில் ஜாதி அரசியலில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *