புதுச்சேரியில் சிறப்போடும், மிகுந்த எழுச்சியோடும் கொண்டாடப்பட்ட அறிவுலக ஆசான் தந்தை பெரியார் பிறந்தநாள் விழா!

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

புதுச்சேரி, அக்.3- தலைவர் தந்தை பெரியாரின் 148ஆம் பிறந்தநாள் விழா புதுச்சேரி மாவட்டத் திராவிடர் கழகம் சார்பில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
முன்னதாக 17.09.2026 வியாழக்கிழமை காலை 10.00 மணியளவில் புதுச்சேரி, பிள்ளைத் தோட்டம் பகுதியில் அமைந்துள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாநிலத் திராவிடர் கழகத் தலைவர் சிவ. வீரமணி மாலை அணிவித்து விழா கொண்டாட்டங்களைத் தொடங்கி வைத்தார்.
காப்பாளர் இர.இராசு உறுதி மொழி கூறிட, அனைத்துத் தோழர் களும் உறுதி மொழி கூறி உறுதி ஏற்றுக் கொண்டனர்.
தொடர்ந்து கழகத் தோழர்கள் அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாகச் சென்று இராசா நகர், பெரியார் படிப்பகம் அடைந்தனர்.
அங்குள்ள தந்தை பெரியார் சிலைக்கு பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத் துணைப் பொதுச் செயலாளர் வி.இளவரசி சங்கர் மாலை அணிவித்து சிறப்பித்தார். மாவட்டச் செயலாளர் தி.இராசா கழகக் கொடியினை ஏற்றி வைத்து ஒலி முழக்கம் எழுப்பினார்.
அப்பகுதி மக்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி அய்யா பிறந்த நாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவர் வே.அன்பரசன், பொதுக்குழு உறுப்பினர் கி.அறிவழகன், துணைத் தலைவர் மு.குப்புசாமி, விடுதலை வாசகர் வட்டத் தலைவர் கோ.மு. தமிழ்ச்செல்வன், செயலாளர் ஆ.சிவராசன், புதுவை நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து கழகப் பொறுப்பாளர்கள் இரா.திருநாவுக்கரசு, மு.ஆறுமுகம், பொ.தாமோதரன், சொ. இளங்கோவன், கா.நா.முத்துவேல், சிவகுமார், சிற்பி இராசன், மகளிரணித் தலைவர் அ.எழிலரசி, இளைஞரணி சசிகுமார், பெரியார் பிஞ்சு இரா.பிரபாகரன், இரா.அன்புச்செல்வன் உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *