புழல், அக். 3- புழலில் அமைந்துள்ள அறிவுலக ஆசான் தந்தை பெரியாரின் சிலைக்கு மாவட்ட கழகத்தின் சார்பில் மாவட்டத் தலைவர் புழல் த.ஆனந்தன் தலைமையில் தோழர்கள் புடைசூழ மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.அதேபோல கும்மிடிப்பூண்டியில் மற்றும் பெரியப்பாலத்திலும் அறிவுலக ஆசான் தந்தை பெரியாரின் சிலைக்கு தோழர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
பின்னர், கும்மிடிப்பூண்டி கழக மாவட்டம் சார்பில் அறிவுலக ஆசான் தந்தை பெரியாரின் 148ஆம் பிறந்தநாளை முன்னிட்டு ஏலியம்பேடு கிராமத்தில் மீஞ்சூர் ஒன்றிய கழகத் தலைவர் ஏலியம்பேடு முருகன் தலைமையில் குருதிக் கொடை வழங்கும் நிகழ்ச்சியில் இயக்கத் தோழர்களும் கலந்துகொண்டு பொதுமக்களும் குருதிக் கொடை அளித்தனர்.
