நாகர்கோயில், அக். 3- தந்தை பெரியாரின் 148ஆம் பிறந்த நாளில் பள்ளி மாண வர்களுக்கான பேச்சுப் போட்டி, ஓவியப் போட்டி நாகர்கோவில் அய்.இ.எல்.சி. பள்ளியில் நடைபெற்றது. அதில் வெற்றி பெற்ற மாண வர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.
பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் உ.சிவ தானு தலைமை தாங்கினார் மாவட்டக் கழகத் தலைவர் மா.மு. சுப்பிரமணியம், மாவட்ட காப்பாளர் ம.தயா ளன், துணைத் தலைவர் ச.நல்லபெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்து பரிசுகள் வழங்கினர்.
மாவட்டச் செயலாளர் கோ.வெற்றிவேந்தன் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்பு ரையாற்றினார் பள்ளி முதல்வர் சாந்தி நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்தார். ஏராளமான மாணவ மாணவி யர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.
வைக்கம் போராட்டத்தில் தந்தை பெரியார், பெரியாரின் பெண்ணுரிமை சிந்தனைகள், பெரியார் எனும் உலகத் தலைவர், சுயமரியாதை இயக்கத்தில் அனைவருக்கும் அனைத்தும், தமிழுக்கு தந்தை பெரியாரின் பங்களிப்பு, என்றும் தேவை பெரியார் போன்ற தலைப்புகளில் மாணவர்கள் உரையாற்றினர். பகுத்தறிவாளர் கழக மாவட் டச் செயலாளர் பெரியார் தாஸ் நன்றி கூறினார்.
