கிருட்டினகிரி மாவட்டத்தில் சிறப்புடன் நடைபெற்ற தந்தை பெரியார் 148ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

கிருட்டினகிரி, அக்.3- கிருட்டினகிரி மாவட்டத்தில் பட்டி தொட்டி எங்கும்  எழுச்சியுடன் நன்றிப் பெருவிழாவாக மனிதநேய மாண்பாளர் அறிவுலக ஆசான் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் 148-ஆம் ஆண்டு பிறந்த நாள் மாவட்டம் முழுவதும் செப்டம்பர் 17 – அன்று வெகு சிறப்பாக நன்றிப் பெருவிழாவாக கொண்டாடப்பட்டது.

கிருட்டினகிரி கார்நேசன் திடல் பெரியார் மய்யத்திலுள்ள தந்தை பெரியார் சிலைக்கு கிருட்டினகிரி மாவட்ட கழகத் தலைவர் கோ.திராவிடமணி தலைமையில்   பகுத்தறிவாளர் கழக மாநில துணைப் பொதுச்செயலாளர் அண்ணா சரவணன், விடுதலை வாசகர் வட்டத் தலைவர் வெ.நாராயண மூர்த்தி, திமுக மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவுப் பேரவை துணை அமைப்பாளர் ஆர்.எஸ்.கிரிஆகியோர் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

நிகழ்ச்சியில் மாவட்ட கழகத் துணைத் தலைவர் வ.ஆறுமுகம், மாவட்ட துணைச் செயலாளர் சி.சீனிவாசன், மேனாள் மாவட்டச் செயலாளர் கா.மாணிக்கம், மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் ச.கிருட்டினன், மகளிரணி மாநில துணைச் செயலாளர்
மு.இந்திராகாந்தி, மாநில மாணவர் கழகத் துணைச் செயலாளர் ச.மணிமொழி, பொதுக்குழு உறுப்பினர் கி.முருகேசன், நகரச் செயலாளர் அ.கோ.இராசா, மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் பூ. இராசேந்திரபாபு, மாவட்ட மாணவர் கழகத் தலைவர் இர.அஜய்குமார், மாவட்ட மாணவர் கழகம் ச.அகரன், காவேரிப்பட்டணம் ஒன்றியத் தலைவர் பெ.செல்வம், பெரியார் பெருந்தொண்டர்கள் அன்பரசு, கோ தங்கராசன், ரபீக் அகமது, சின்னராஜ், நகர ப.க. நாகராஜ் மற்றும் விசிக மாவட்டத் தலைவர் தமிழ்மணி, மண்டல துணைச் செயலாளர் த.தியாகு, மாநில நிர்வாகி அருண் உள்ளிட்ட தி.க., திமுக, விசிக  பொறுப்பாளர்களும் தோழர்களும் கலந்துக்கொணடு தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி  சமூக  நீதிநாள்  உறுதி மொழி ஏற்றுக்  கொண்டனர். கிருட்டினகிரி மாவட்டத்தில் கிருட்டினகிரி, காவேரிப்பட்டணம், மத்தூர், ஊற்றங்கரை, போச்சம்பள்ளி, பையூர்,  பழையபேட்டை, கத்தாழை மேடு  பெரியார் நினைவு சமத்துவாபுரம், மேலும் மாவட்டம் முழுவதும் அனைத்துக் கிளைகளிலும் அறிவுலக ஆசான் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் 148-ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவை நன்றிப் பெருவிழாவாக எழுச்சியுடன் வெகுசிறப்பாக கொண்டாடப் பட்டது.

பேச்சுப்போட்டி

பள்ளி மாணவச் செல்வங் களுக்கு ஊற்றங்கரை கீழ்குப்பம் கிராமத்தில் மாவட்ட இளைஞ ரணித் தலைவர் சீனிமுத்து. இராசேசன் ஒருங்கிணைப்பிலும், மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் கிருட்டினகிரி பெரியார் மய்யத்திலும் மாணவர்களுக்கு பேச்சு போட்டிகளும் சிறப்பாக நடத்தி பரிசுகளும் பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கி சிறப்பித்தனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *