மாநிலங்களுக்கான வரிப்பகிர்வு கடந்த ஆண்டைவிட ரூ.60 ஆயிரம் கோடி குறைவு!

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

புதுடில்லி, அக். 03- ஒன்றிய அரசின் மாதாந்திரக் கணக்குகள் ஒருங்கிணைக்கப்பட்டு அறிக்கைகள் (இந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் வரை) வெளியிடப்பட்டு உள்ளன. அதன்படி ஒன்றிய அரசு, ஆகஸ்டு மாதம் வரை ரூ.13,67,709 கோடி (மொத்த வரவுகளில் 37.5 சதவீதம்) வரவு பெற்றுள்ளது.

இதில் ரூ.8,37,921 கோடி வரி வருவாய், ரூ.4,54,549 கோடி வரிசாரா வருவாய். மேலும், ரூ.75,239 கோடி கடன் சாரா மூலதன வரவுகள் ஆகும். இந்த காலக்கட் டத்தில், மாநில அரசுகளுக்கு வரி பங்கீட்டுத் தொகை யாக ரூ.5,90,391 கோடி மாற்றப்பட்டு உள்ளது. இது முந் தைய ஆண்டை விட ரூ.60,243 கோடி குறைவு ஆகும்.

ஒன்றிய அரசால் செய்யப்பட்ட மொத்த செலவினம் ரூ.20,77,958 கோடி. இதில் ரூ.15,68,009 கோடி வருவாய் கணக்கிற்கும், ரூ.5,09,949 கோடி மூலதன கணக்கிற்கும் செலவிடப்பட்டு உள்ளது. மொத்த வருவாய் செலவினத்தில், ரூ.5,14,810 கோடி வட்டிக்காகவும், ரூ.1,87,037 கோடி முக்கிய மானியங்களுக்காகவும் செலவிடப்பட்டு உள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *