புதுடில்லி, அக். 03- தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், பதவி விலக வேண்டுமென்பதை வலியுறுத்தி டில்லி மற்றும் மும்பையில் நேற்று (2.10.2026) போராட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த சூழலில் டில்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்ட 500-க்கும் மேற்பட்டவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மும்பை
ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி சிஜேபி சார்பில் மும்பையில் உள்ள சிவாஜி பார்க்கில் நேற்று (அக்.2) போராட்டம் நடத்தப்படும் என்று அதன் நிறுவனர் அபிஜித் தீப்கே அறிவித்திருந்தார். இதற்கு மகாராஷ்டிரா காவல்துறையினர் அனுமதி அளிக்கவில்லை. இருப்பினும் அதை பொருட்படுத்தாமல் சிவாஜி பார்க் பகுதியில் குவிந்த மும்பை வாழ் இளைஞர்கள் பலரை காவல்துறையினர் கைது செய்தனர்.
