பா.ஜ.க. பாணியில் எம்எல்ஏக்களை மிரட்டி கட்சியில் சேர்க்கும் தவெக! இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் மு.வீரபாண்டியன் குற்றச்சாட்டு

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

திருப்பூர், அக். 3– திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் லட்சுமணனுக்கு ஆதரவாக அந்த கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் தாராபுரம் அய்ந்து முக்கு பகுதியில் நேற்று (2.10.2026) பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர் கூறியதாவது: நடக்க இருக்கும் சட்டமன்ற இடைத்தேர்தல் ஓர் இயல்பான தேர்தல் அல்ல என்பது அனைவருக்கும் தெரியும்.அதிமுகவிலிருந்து வெற்றி பெற்றுவிட்டு அதிகாரம் இருக்கிற தவெகவுக்கு செல்கிற இந்த 2 சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்தலில் போட்டியிடுவது நெறிசார்ந்த அரசியல் அல்ல. பாஜ அதிகாரத்திற்கு வந்தவுடன் பல நூற்றுக்கணக்கான சட்டமன்ற உறுப்பினர்களை மிரட்டியே தங்கள் கட்சியில் இணைத்துக்கொண்டார்கள்.

பல நாடாளுமன்ற உறுப்பினர்களை, பல கட்சித் தலைவர்களை மிரட்டியே தங்கள் கட்சியில் இணைத்துக் கொண்டார்கள். அந்த வகையில்தான் தவெகவின் அணுகுமுறை உள்ளது. இது ஏற்புடையது அல்ல. . எனவே, அவர்களை ஆதரிக்க இயலாது என்று சொல்லி நாங்கள் தனியாகக் களம் காண்கிறோம். மேகதாது விவகாரத்தில் மாநில மக்களின் குரலை முதலமைச்சர் அழுத்தமாக வெளிப்படுத்த வேண்டும். இவ்வாறு வீரபாண்டியன் பேசினார்.

‘‘மாநில அரசு, ஒன்றிய அரசுக்கு எதிரான எதிர்ப்பு குரல் கூட பேசுவதற்கு அஞ்சுகிறார்கள். நாட்டின் பிரதமர், உள்துறை அமைச்சருக்கு எதிராக சட்டமன்றத்தில் ஒரு வார்த்தை வெளிப்படவில்லை. 13 கோடி பேருடைய வாக்குகளை பறித்திருக்கிறார்கள். பிரதமரும், உள்துறை அமைச்சரும் இதற்கு பொறுப்பேற்க வேண்டும். சட்டமன்றத்தில் துணிச்சலான ஒரு வார்த்தை இல்லை. மிகப்பெரிய ஜனநாயகப் படுகொலையை நிகழ்த்தியிருக்கிற உள்துறை அமைச்சரும், நாட்டின் பிரதமரும் பொறுப்பேற்க வேண்டும் என்று சொல்வதற்குச் சட்டமன்றம் அஞ்சுகிறது’’ என்று வீரபாண்டியன் தெரிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *