ஓட்டுக்குப் பணம் விநியோகிப்பதுதான் தூய சக்தியா? சி.பி.எம். மாநில செயலாளர் சண்முகம்

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

புதுச்சேரி, அக். 3- “தூய சக்தி நாங்கள்தான் என தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் சொல்வதற்கு நேர் எதிராக வாக்காளர்களுக்கு பணம் தரப்படுகிறது. இது ‘தூய சக்தி’ அடையாளத்தை அழித்து ஒழிக்கிறது. இதற்கு அவர் பதில் சொல்ல வேண்டும்” என்று சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் இந்திய கம்யூனிஸ்ட்வேட்பாளர் சலீமை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் சண்முகம் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது செய்தியாளர்களிடம் கூறியதாவது:

அதிக ஆண்டுகள் முதலமைச்சராக இருக்கும் ரங்கசாமி அரசியல் நெறிமுறையற்ற நிலையில்தான் தொடர்ந்து இப்பதவியில் இருக்கிறார்.

புதுச்சேரி முன்னேற்றத்துக்கு ஏதும் அவர் செய்யவில்லை. மாநிலத் தகுதி கோரிக்கையை நிறைவேற்றக்கூட அவர் செயல்புரியவில்லை.

தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையம் செயல்படவிலலை. எந்த தேர்தல் அதிகாரிகளையும் தொகுதியில் பார்க்கமுடிவதில்லை. இடைத்தேர்தலில் பணப்புழக்கம், விதிமீறல் இருக்கும் என அறிந்தும் அவர்கள் செயல்படவில்லை. தாராபுரம், மதுராந்தகம் ஆகிய இரு தொகுதிகளிலும் செயலற்ற தன்மையில் தேர்தல் ஆணையம் உள்ளது.

தூய சக்தி நாங்கள்தான் என தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் சொல்வதற்கு நேர் எதிராக வாக்காளர்களுக்கு பணம் தரப்படுகிறது. இது தூய சக்தி அடையாளத்தை அழித்து ஒழிக்கிறது. இதற்கு அவர் பதில் சொல்ல வேண்டும்.

தமிழ்நாட்டில் பாஜக சொல்வது போல் ஆட்சி மாற்றம் வர வாய்ப்பு இல்லை. தேர்தல் ஆணையம் 13 கோடி மக்களின் வாக்குரிமையை பறித்தது. இந்நடவடிக்கை மூலம் ஒன்றிய பாஜக அரசு விரும்பும் ஆட்சியை ஏற்படும் மோசடி ஆணையராக ஞானேஷ்குமார் செயல்பட்டது தெரியவந்துள்ளது.

தற்போது படிவம் மாற்றி பெயர் போதும் என்கிறார்கள். ஒரேயடியாக தாத்தா குறித்து விவரம் கேட்பதும், தற்போது தந்தை பெயர் கூட தேவையில்லை என்பதும் தவறானது. தகுதியானோரை மட்டும் சேர்க்க வேண்டும்.

பொதுத்தேர்தலில் பிரச்சாரம் அறிவித்து சென்றதை விட விஜய் ரத்து செய்த பிரச்சாரமே அதிகம்.

தவெகவுக்கு ஆதரவாக தேர்தல் களம் இல்லை. போட்டி கடுமையாக உள்ளதால் அக்கட்சியினர் தெருதெருவாக செல்கிறார்கள். பொறுப்பற்ற முறையில் பதவி விலகினர். இவ்வேட்பாளர்களை விரட்டி அடிக்க வேண்டும் என்ற எண்ணம் அதிகமாகவுள்ளது. தவெகவின் நெறிமுறையற்ற செயலால் திணிக்கப்பட்ட தேர்தல் இது” என்றார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *