நவ.1 முதல் 100 சார்பதிவாளர் அலுவலகங்களில் சனிக்கிழமை கட்டாயப் பணி ரத்து! அரசாணை வெளியீடு

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

சென்னை, அக். 3- தமிழ்நாடு வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலர் ஜெ.குமரகுருபரன் வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:

கடந்த 2022ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணையின்படி, அலுவலகங்களில் பணியாற்றும் பொதுமக்கள் ஆவணப்பதிவு மேற்கொள்ள ஏதுவாக வார விடுமுறை நாளான சனிக்கிழமைகளில் சார்பதிவாளர் அலுவலகங்கள் செயல்படவும், அந்த அலுவலகங்களில் அதன் வேலைப்பளுவுக்கு தகுந்தவாறு தேவையான பணியாளர்கள் பணியாற்ற சம்பந்தப்பட்ட மாவட்ட பதிவாளர்களுக்கு உத்தரவிடவும் பதிவுத்துறை தலைவருக்கு அனுமதியளிக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த செப்.8ஆம் தேதி தமிழ்நாடு அரசுக்கு பதிவுத்துறை தலைவர் எழுதிய கடிதத்தில், ‘‘எங்கிருந்தும் பதிவு என்ற குறிக்கோளை எய்தும் வகையில், சார்பதிவாளர்கள் ஆவணப்பதிவு மட்டுமின்றி பல்வேறு கூடுதல் நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. எனவே, சனிக்கிழமைகளில் ஆவணப்பதிவு காரணமாக அலுவலகப் பணிகளில் பின்னடைவு ஏற்படுகிறது.

வரும் காலங்களில் அனைத்து ஆவணங்களும் வருகையில்லா பதிவு, காகிதமில்லா முறையில் மேற்கொள்ள உத்தேசிக்கப் பட்டுள்ளதால், தற்போது 100 சார்பதிவாளர் அலுவலகங்களில் நடைமுறையில் உள்ள சனிக்கிழமை கட்டாயப்பணி என்பதை கைவிடலாம் என்ற சட்டப்பேரவையில் அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பை நவ.1ஆம் தேதி முதல் செயல்படுத்தலாம்.

இதற்காக 2022இல் பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டும்’’ என்று கோரியிருந்தார்.

இதைப் பரிசீலித்த தமிழ்நாடு அரசு, பதிவுத்துறை தலைவரின் கருத்துகளை ஏற்று, சனிக்கிழமைகளில் செயல்படும் 100 சார்பதிவாளர் அலுவலகங்கள் நவ.1ஆம் தேதி முதல் வார நாட்களில் மட்டுமே செயல்படும். சனிக்கிழமை கட்டாயப்பணி முறையை கைவிட முடிவெடுத்து உத்தரவிடப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேட்டூர் அணையில்
நீர்மட்டம் 75 அடியாகக் குறைந்தது

மேட்டூர், அக்.3- மேட்டூர் அணையின் நீர்மட்டம் 75.62 அடியாக குறைந்ததால், நீரில் மூழ்கியிருந்த கிறிஸ்தவ ஆலயத்தின் கோபுரம் தற்போது வெளியே தெரிய தொடங்கியது. இதைக் காண சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் பண்ணவாடி பரிசல் துறைக்கு வருகை தருகின்றனர்.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று (2.10.2026) காலை நிலவரப்படி 75.62 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 1854 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் அணையில் இருந்து பாசனத்துக்கு வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடி தண்ணீர்திறந்து விடப்பட்டு வருகிறது. தற்போது அணையில் 37.73 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

இந்த நிலையில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 80 அடிக்கு கீழே சரிந்தால் பண்ணவாடி பரிசல் துறையில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தின் இரட்டை கோபுரம் தண்ணீருக்கு வெளியே தெரியும். இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இதில் ஒரு கோபுரம் சாய்ந்தது. தற்போது அணையின் நீர்மட்டம் 75.62 அடியாக குறைந்ததால் அணைக்குள் மூழ்கியிருந்த கிறிஸ்தவ ஆலயத்தின் கோபுரம் தற்போது வெளியே தெரிய தொடங்கியது. இதைக்காண பண்ணவாடி பரிசல் துறைக்கு சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *