ஊழல் செய்து சேர்த்த சொத்துகளைப் பறிமுதல் செய்தால்தான் அதிகாரிகளுக்கு அச்சம் ஏற்படும்! உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

மதுரை. அக். 3- ஊழல் செய்து சேர்த்த சொத்துக்களை பறிமுதல் செய்தால் தான் அதிகாரிகளின் மனதில் அச்சத்தை ஏற்படுத்த முடியும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி கூறியுள்ளார்.

திருச்சியைச் சேர்ந்த தங்கவேல், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், ஓய்வு சார்பதிவாளர் மற்றும் அவரது மனைவிக்கு திருச்சி நீதிமன்றம் கடந்த 2024இல் சிறைத்தண்டனை விதித்தது.

இதில் மூன்றாம் தரப்பினராக எனது சொத்தையும் பறி முதல் செய்ய வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட் டுள்ளது. எனது சொத்தை பறிமுதல் செய்யும் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.புகழேந்தி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்ப தாவது:

ஊழல் மற்றும் ஊழல் நடைமுறைகள் வேறு எந்தக் குற்றத்தையும் விட மிகவும் தீவிரமாகக் கருதப்பட வேண்டும். நமது சமூகத்தின் ஒவ்வொரு பகுதியையும் பாதித்துள்ள ஊழல் எனும் தீய பழக்கத்தை எதிர்த்துப் போராடுவதற்கு, சொத்து பறிமுதல் செய்வதும் அவசியமாகும். இந்தச் சூழ்நிலையில், ஊழல் தடுப்புச் சட்டம் 1988இல் தேவையான திருத்தங்கள் செய்யப்பட வேண்டும். ஊழல் வழிகளிலும் வருமான ஆதாரங்களுக்கு அதிகமாகச் சேர்த்த சொத்துகளின் வழியிலும் பெறப்பட்ட சொத்துகளை இணைப்பது கட்டாய மாக்கப்பட வேண்டும்.

இத்தகைய கடுமையான, தடுப்பு சட்ட நடவடிக்கைகள் வரையறுக்கப்பட்டால் மட்டுமே, அரசால் சொத்துகளைப் பயனுள்ள முறையில் இணைக்க முடியும். மேலும் ஊழல் வழிகளில் பெறப்பட்ட சொத்துக்களை அனுபவிக் கும் அதிகாரிகளின் மனதில் அச்சத்தை ஏற்படுத்த முடியும்.

இல்லையெனில், இச்சட்டப் பிரிவுகள் வெறும் காகிதத்திலேயே எஞ்சியிருக்கும். எவ்வித தடுப்பு விளைவையும் ஏற்படுத்தாது. இந்த விஷயத்தில் அரசாங்கம் முன்முயற்சி எடுத்து, ஊழல் தடுப்புச் சட்டம் 1988இல் பொருத்தமான திருத்தங்களை அறிமுகப் படுத்தும் என்று இந்த நீதிமன்றம் நம்புகிறது. அதே சமயம், இந்த வழக்கில் இவர் மூன்றாம் தரப்பு என்பதால், சொத்துக்கள் பறிமுதல் செய்ய கீழமை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு உத்தரவிட் டுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *