நீ கிழவனல்ல…
நிறைய வயதை
தனக்குள் செருகிக்கொண்ட
ஈரோட்டு இளைஞன்!
நீ மனிதனல்ல…
அந்த இயல்பைத் தாண்டிய
விருப்பு வெறுப்பற்ற
தன்மான இயந்திரம்!
நீ எதன் மீதும்
பற்று வைக்காதவன்!
அதனால்தான்
இயற்கையே
உன்னிடம் பாடம் கற்று
சுயநலம் துறந்தது!
ஆம்! வானம் எதிர்பார்த்து
மழை தரவில்லை!
காற்று எதிர்பார்த்து
சுழலவில்லை!
நீ துப்பாக்கிகளுக்குத்
தோட்டா தந்தவன்!
ஈட்டிகளுக்குத்
தீட்டிக்கொள்ள
தன்னையே சாணைக் கல்லாக்கியவன்!
ஈக்களின் சிறகுகளுக்கும்
இனமானம் கற்பித்தவன்!
நீ படைக்களம்!
நாங்கள் உன்
அடைக்கலம்!!
– கவிஞர் கீரை பிரபாகரன்
