அனுமானிடம் போனில் பேச்சு முதல் ஜெட் விமானம் வரை: பாகேஷ்வர் தாம் தீரேந்திர சாஸ்திரியின் சர்ச்சை பின்னணி!

3 Min Read

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

புதூரான்

கட்டுரை, ஞாயிறு மலர்

மத்தியப் பிரதேசத்தில் உள்ள பாகேஷ்வர் தாம் என்ற மடத்தின் தலைவர் 27 வயதான சாமியார் தீரேந்திரர் சாஸ்திரி கடந்த 3 ஆண்டு களாக தொடர் சர்ச்சையில் சிக்கி வருகிறார்.

இருப்பினும் குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட அனைத்து உயர் மட்டத் தலைவர்களோடும் அவரது நட்புத் தொடர்கதையாகி வருகிறது.

அண்மையில் அவர் அம்பானி வீட்டு விநாயகர் விழாவிற்கு வருகை தந்தபோது 2 கிலோ எடையுள்ள தங்கக் காலணி அணிந்து வந்து பெரும் விவாதத்தைக் உண்டாக்கினார்.

இவர் தொலைபேசியில் இராவணனோடு பேசுவாராம், அனுமாரோடு பேசுவாராம்.  தொலை பேசியைக் கையில் எடுத்துக்கொண்டு “ஹலோ அனுமான் ஜி” என்று அவர் பேசுவதும், எதிரில் பல நூறு பேர் பக்தியோடு அமர்ந்திருப்பதும் காணொலிகளில் தெரிய வரும்.

2020ஆம் ஆண்டு மரத்தடியில் உட்கார்ந்து ஜோசியம் பார்த்தவர் இன்று சொந்தமாக 12 பேர் அமரும் ஜெட் விமானத்தையும், 19 வெளிநாட்டு  ரக கார் களையும் வாங்கி விட்டார். இந்தக் காரின் மதிப்பே ரூ. 140 கோடி ஆகும்.

அண்மையில் இவரைக் காணச்சென்ற ஒரு பெண்மணி “எங்களுக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர், அடுத்ததாக ஆண் குழந்தை வேண்டும்” என்று கோரிக்கை வைத்துள்ளார்.

கட்டுரை, ஞாயிறு மலர்

அதற்கு அந்தச் சாமியாரோ, “உங்கள் கணவருக்குச் செய்வினையுள்ளது: ஏதோ பேய் பிடித்துள்ளது. அதனால்தான் பெண் குழந்தைகள் பிறக்கின்றன. இப்போது நான் ஆசி வழங்கிவிட்டேன், நிச்சயம் ஆண் குழந்தைதான் பிறக்கும்” என்று எப்போதும் போல் அவர் ஒரு வெள்ளைத்தாளில் எழுதி கியாரண்டி வாக்குறுதிச் சீட்டுக் கொடுத்துள்ளார். (மோடி அண்மைக் காலமாகப் கூறுகின்ற ‘இது மோடியின் கியாரண்டி’ என்ற சொல்லாடலை இந்த 27 வயது ஏமாற்றுச் சாமியாரிடமிருந்துதான் சுட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.)

சாமியாரின் வாக்கை உண்மை என நம்பிய அந்தத் இணையருக்கு, அண்மையில் 4-ஆவதாக ஒரு பெண் குழந்தையே பிறந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள், சாமியார் தீரேந்திர சாஸ்திரி தங்களுக்கு அளித்த வாக்குறுதிச் சீட்டை  சமூக வலைதளங்களில் வெளியிட்டு, அவர் ஒரு போலியானவர் என்பதை அம்பலப்படுத்தியுள்ளனர்.

“இந்தச் சாமியாரின் பொய் வார்த்தையை நம்பி ஏமாந்ததுதான் மிச்சம். மீண்டும் ஒரு பெண் குழந்தை பிறக்கும் என்று தெரிந்திருந்தால், நாங்கள் கண்டிப்பாக அடுத்த குழந்தைக்குத் திட்டமிட்டிருக்கவே மாட்டோம்” என அந்த இணையர் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

அறிவியல் யுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் வேளையிலும், இது போன்ற மூடநம்பிக்கைச் சம்பவங்கள் அரங்கேறுவது மிகவும் கவலையளிப்பதாக உள்ளது.

இச்சம்பவம் உணர்த்தும் முக்கியக் கருத்துகள்:

கட்டுரை, ஞாயிறு மலர்

பிறக்கப்போகும் குழந்தை ஆணா அல்லது பெண்ணா என்பதைத் தீர்மானிப்பது தந்தையின் எக்ஸ் (X), ஒய் (Y) குரோமோசோம்களே தவிர, எந்த ஒரு சாமியாரின் ஆசியோ அல்லது பேய்-பிசாசு தடைகளோ அல்ல. இந்த அடிப்படை அறிவியல் புரிதல் சமூகத்தில் இன்னும் முழுமையாகச் சென்றடையவில்லை என்பதற்கு இச்சம்பவமே சாட்சி!

ஆண் குழந்தைதான் வேண்டும் என்ற ஆசையும், பெண் குழந்தைப் பிறப்பதற்கு ஆண் அல்லது பெண்ணின் உடம்பில் “பேயோ அல்லது செய்வினையோ” இருக்கிறது என்று கூறுவதும் இழிவுபடுத்தும் அறியாமையின் உச்சக்கட்டம்.

மக்களின் பலவீனத்தையும், ஆண் வாரிசு ஆசையையும் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு போலி வாக்குறுதிகளை அள்ளி வீசும் சாமியார்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அத்தகைய சாமியார்களுக்கு பாஜக ராஜ்ஜியத்தில் பெரும் வரவேற்பும் கிடைக்கிறது. 5 ஆண்டுகளுக்கு முன்பு மரத்தடியில் ஜோதிடம் பார்த்தவர், இன்றோ சொந்தமாக ஜெட் விமானமும், 2 கிலோ தங்கச் செருப்பு அணிந்து கொண்டு அம்பானி வீட்டு விழாவிற்குச் செல்கிறார் என்றால் எந்த அளவுக்கு கவனிப்பு இருக்கும் என்பதை அறிந்துகொள்ளுங்கள்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *