சிந்தனையர் ஒழுக்கநெறிச் சிறப்பியலார்
சீர்திருத்தக் காரரென தந்தைபெரியார்
முந்திநாம் பெற்றிருந்தத் தீண்டாமைகள்
முடக்குதற்குக் காரணகர் முனைப்புடனே
சந்ததியார் வாழ்வதற்கே கல்வியென்றும்
சாத்திரங்கள் அறிவழிக்கும் கருவியென்றும்
இந்தநம் பெரியாரே இருக்கலானார்
இல்லைசாதி கடவுள் மதம் என்றிட்டாரே!
தந்திரத்தால் தாம்அடிமை ஆக்கலானோம்
தற்குறியர் என்றாகிச்சில நூற்றாண்டுகள்;
மந்திரங்கள் சடங்குகளை மடமையென்றார்
மனிதநெறி கோட்பாட்டர் அய்யாபெரியார்!
வெந்தணலாய் இருந்திட்டார், அரசுவேலை
வேண்டுமென வலியுறுத்திஇட ஒதுக்கீட்டால்
தந்தமைக்குப் பெரியாரின் சமூகநீதி
தகவமைப்பே பெரியாரால் பெருமிதமாய்!
தொந்தரவாய் இருப்பதற்கு ஆரியமே
துரத்திட்டார் பார்ப்பனியம் பயந்தோடிட
உந்துதலயாய் தன்மானம் உயிர்மூச்சாக
ஒலித்திட்ட உயர்வழி காட்டி, பெரியார்
தந்திட்டார் திருக்குறளை நமக்கானதாய்
தாக்கத்தை ஏற்படுத்த மாநாடுநடத்தி
அந்தரங்கம் என்றில்லா அறிவுச்செழுமை
அய்யாநாம் பெரியாரேஆக்கம் என்போம்.
கந்தலென இருந்தோரைக் கசக்கியவர்
கசப்பான எண்ணத்தை இடித்தெறிந்தார்
விந்தையெனக் கருதிட்டார் இடஒதுக்கீட்டை
விஞ்ஞானி சமூகநீதிக் கோட்பாட்டியலில்
சொந்தமெனக் கொண்டார் சொரணையிணைச்
சுட்டிக்காட்ட வேண்டியராய் நாமிருப்போம்
எந்தநிலை யென்றாலும் பெரியாரியலே
இலக்குயெனப் பேணுவதே பெருமிதமாம்…
– பாவலர் மு.பசுலுதீன்,
பகுத்தறிவாளர் கழகம்,
மணப்பாறை
