உத்தரப் பிரதேசத்தில் 10 ஆண்டுகால மோசடி: கோதுமை மாவில் மணல் கலப்படம்!

சிறப்பு புத்தக சலுகைகள்

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா மற்றும் பிரோசாபாத் மாவட்டங்களில் இயங்கி வரும் மாவு ஆலைகளில், பொதுமக்களுக்கு வேட்டு வைக்கும் வகையில் கோதுமை மாவில்  அபாயகரமான மணல்தூள் கலக்கப்பட்டு வரும் அதிர்ச்சித் தகவல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

பல ஆண்டுகளாகத் தொடரும் மோசடி

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கிரானைட் கல் குவாரிகளில் இருந்து சொற்ப விலைக்கு வாங்கப்படும் கல் பொடி,(மணல்) உத்தரப் பிரதேசத்தில் அரசு விநியோகத்திற்காக இயங்கும் கோதுமை ஆலைகளுக்கு ரகசியமாகக் கொண்டு வரப்படுகிறது. பின்னர்,ரசாயன முறையில் கல்பொடியை மாவுபோல் மாற்றி கோதுமையுடன் குறிப்பிட்ட விகிதத்தில் அரைக்கப்பட்டு  அரசு ஒப்பந்த விற்பனை நிலையங்களுக்கு அனுப்பப்படுகிறது. இந்த சட்டவிரோதக் கலப்படத்தின் மூலம் ஆலை உரிமையாளர்கள் எவ்வித தடங்கலுமின்றி நாளொன்றுக்கு சராசரியாக 1000 முதல் 20000  வரை கூடுதல் லாபம் ஈட்டி வருவதாகக் கூறப்படுகிறது. மிகவும் கவலையளிக்கும் விசயம் என்னவென்றால், அதிகாரிகளின் பல ஆய்வுகளில் சிக்காமல் கடந்த 10 ஆண்டுகளாக இந்த உணவு மோசடி தடையின்றி நடைபெற்று வருகிறது.

உணவுப் பொருட்களில் கல் பொடியை தொடர்ச்சியாகக் கலப்பது நுகர்வோரின் உடலுக்குக் கடுமையான தீங்கை விளைவிக்கும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இத்தகைய மாவை தொடர்ச்சியாகப் பயன்படுத்துவதால்: சிறுநீரகக் கற்கள் உருவாகும் அபாயம் அதிகம்.

செரிமான மண்டலம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, வயிற்றுப் புண் மற்றும் குடல் சார்ந்த நோய்கள் ஏற்படக்கூடும். நீண்ட கால அடிப்படையில் பிற தீவிர உடல்நலப் பாதிப்புகளுக்கும் இது வழிவகுக்கும்.

உணவுப் பாதுகாப்புத் துறையின் போதிய கண்காணிப்பு இல்லாததே இந்த நீண்டகால மோசடிக்குக் காரணம் என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். பொதுமக்களின் உயிருடன் விளையாடும் இத்தகைய ஆலை உரிமையாளர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், ஆலைகளில் உடனடி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

பொதுமக்களே கண்டுபிடித்தனர்

ஈரான்-அமெரிக்க போர் காரணமாக மணலை மாவு போல் மாற்றும் ரசாயணம் இறக்குமதி ஆகாமல் போகவே மாவு மில்லிலேயே மணலை மாவாக அரைத்துள்ளனர். ஆனால் சரியாக அரைபடாமல் இருக்கும் சிறு கற்கள் இது மாவு சலிக்கும்போது அப்படியே ஜல்லடையில் இருந்துள்ளதால் பொதுமக்கள் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகளிடம் புகார் அளித்த பிறகு இந்த விவகாரம் வெளிவந்துள்ளது அதிர்ச்சியை அளிக்கும் இந்த கலப்படம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத் தக்கது

இந்த மாவுதான் பள்ளி மற்றும் அரசு நிவாரண முகாம் உள்ளிட்ட இடங்களுக்கும் ரேசன் கடைகளில் பொதுமக்களுக்கு மான்யமாகவும் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.bhaskarenglish.in/local/uttar-pradesh/news/up-flour-factories-stone-powder-mixing-scam-agra-reporter-expose-138551807.html

Are you eating flour or powdered stone?: Wheat ground with white stone in UP mills; undercover probe exposes racket.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *