நாகர்கோவில், அக்.2- தந்தை பெரியாரின் 148ஆம் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி மாணவர் களுக்கான பேச்சுப் போட்டி மற்றும் ஓவியப் போட்டி நாகர்கோவில் அய்.இ.எல்.சி பள்ளியில் நடைபெற்றது. பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் உ.சிவதானு தலைமை தாங்கினார். திராவிடர் கழக மாவட்டத் தலைவர் மா.மு.சுப்பிரமணியம், மாவட்டக் காப்பாளர் ம.தயாளன் துணைத் தலைவர் ச.நல்லபெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட கழகச் செயலாளர் கோ.வெற்றிவேந்தன் தொடங்கி வைத்தார். பள்ளி முதல்வர் சாந்தி போட்டிகளை ஒருங்கிணைத்தார். ஏராளமான மாணவ மாணவியர்கள் போட்டிகளில் கலந்து கொண்டு பேசினர். பெரியார் படங்களை வரைந்தனர்.
வைக்கம் போராட்டத்தில் தந்தை பெரியார், பெரியாரின் பெண்ணுரிமைச் சிந்தனைகள், பெரியார் எனும் உலகத் தலைவர், சுயமரியாதை இயக்கத்தில் அனைவருக்கும் அனைத்தும், தமிழுக்கு தந்தை பெரியாரின் பங்களிப்பு, என்றும் தேவை பெரியார் போன்ற தலைப்புகளில் போட்டி நடைபெற்றது.
பகுத்தறிவாளர் கழக மாவட்ட செயலாளர் பெரியார் தாஸ் நன்றி கூறினார்.
