மேட்டுப்பாளையம், அக்.2- மேட்டுப்பாளையம் அருகே ஜெ.ஜெ. நகரில் பெரியார் படிப்பகம் திறக்கப்பட்டது. திறப்பு விழாவையொட்டி தந்தை பெரியார் 148ஆம் பிறந்த நாள் விழாவும் கொண்டாடப்பட்டது.
திராவிடர் கழக பகுதி பொறுப்பாளர் செல்வம், மாவட்டத் தலைவர் சு.வேலுசாமி, மாவட்டச் செயலாளர் கா.சு.அரங்கசாமி, DYFI மாவட்டத் தலைவர், செயலாளர், DYFI தோழர்கள், திராவிடர் கழகத் தோழர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் மாணவர்கள், ஆசிரியர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர் நிகழ்ச்சியை தோழர் பிரதீப் குமார் ஒருங்கிணைத்தார். நிகழ்ச்சியில் பெரியார் பற்றி பேசிய குழந்தைகளுக்கு புத்தகங்கள் பரிசாக வழங்கினார்கள். சின்னஞ்சிறு கிராமத்தில் எழுச்சியுடன் தந்தை பெரியாரின் பிறந்த நாளைக் கொண்டாடினார்கள்.
