பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் வடிவமைப்பு சிந்தனைப் பயிலரங்கம்

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

வல்லம், அக்.2- செப்டம்பர் 10, 11 நாள்களில் பெரியார் ஃபவுண்டேஷன் ஃபார் ஃபிரி இன்குபேசன் (Foundation for Pre Incubation) சார்பில் இரண்டு நாள் வடிவமைப்பு சிந்தனைப் பயிலரங்கம் வல்லம் பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் நியூ ஹாலில் நடைபெற்றது.

நிகழ்வை இரண்டாமாண்டு கணினியில் பிரிவின் மாணவி எஸ்.சஹித்யா தொகுத்து வழங்கினார். மூன்றாமாண்டு கணினியில் பிரிவின் மாணவி எல்.பிரியங்காசிறீ வரவேற்புரையும், பி.பஸ்ரினாசஹ்ரின் நிகழ்வின் அறிமுகம் மற்றும் சிறப்பு விருந்தினர் அறிமுகமும் செய்தனர்.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக முனைவர் பி.கருப்பண்ணன், (புராஜக்ட் லோடு, ஸ்டார்ட்அப் தமிழ்நாடு), எஸ்.மகேஷ்குமார் (புராஜக்ட் அசோசியேட், ஸ்டார்ட்அப் தமிழ்நாடு), அய்.சரத்குமார், (CEO, Choose Your Cars) ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு டிசைன் திங்க்கிங்-ன் 5 நிலைகளான Empathize, Define, Ideate, Prototype, Test குறித்தும், பிரச்சினை தீர்வு, Startup யோசனைகளை உருவாக்குதல் மற்றும் தொழில்முனைவு வழிகாட்டுதல் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தனர்.

இப்பயிலரங்கில் மருதுபாண்டியர் கலைக் கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் பாரத் குரூப் ஆப் இன்ஸ்ட்டிடியுசன் மாணவ மாணவிகள், மற்றும் பெரியார் பாலிடெக்னிக் கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர். இப்பயிலரங்கம் மாணவர்களின் புதுமை சிந்தனை மற்றும் தொழில்முனைவு திறனை மேம்படுத்தும் வகையில் அமைந்தது.

இந்நிகழ்ச்சியில் இக்கல்லூரியின் முதல்வர் க.ப.வெள்ளியங்கிரி தலைமையேற்று தலைமையுரை ஆற்றினார் மற்றும் Pre-incubation  தலைமை செயல் அதிகாரி முனைவர் க.ரோஜா மாணவர்களுக்கு இந்த நவீன காலகட்டத்திற்கு ஏற்றவாறு மாணவர்கள் தங்களது சிந்தனைகளை மாற்றி அமைக்க புதிய வழிமுறைகளை கையாளுமாறு எடுத்துரைத்தார்.

நிறைவாக மூன்றாமாண்டு கணினியில் பிரிவின் மாணவி எம்.தாரணி நன்றியுரை ஆற்றினார். பெரியார் ஃபவுண்டேஷன் ஃபார் பிரி இன்குபேசன் (Periyar Foundation for Pre-incubation) ஏற்பாட்டில் நடந்த இந்த நிகழ்வில் 100 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர் மற்றும் மற்ற கல்லூரிகளிலிருந்து ஆசிரியர்களும் கலந்து கொண் டார்கள்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *