துபாய் விமானத்தில் 180 பேரின் உயிரைக் காப்பாற்றிய இந்திய விமானி பயங்கரவாத சதி முறியடிப்பு!

1 Min Read

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

டெல் அவிவ், அக். 01– துபாயில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கு 180-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பறந்த ஃப்ளைதுபாய் விமானத்தில், ஓமன் நாட்டை சேர்ந்த உதவி விமானி நடத்தியத் தாக்குதலை இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கேப்டன் தீரத்துடன் எதிர்கொண்டு முறியடித்துள்ளார். 9/11 பாணி தாக்குதலைப் போன்ற இந்த பயங்கரவாத முயற்சியைத் தடுத்து, விமானத்தை ஆபத்தின்றி தரை இறக்கிய இந்திய விமானிக்கு பாராட்டுகள் குவிகின்றன.

விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது, ஓமன் நாட்டைச் சேர்ந்த உதவி விமானி திடீரென காக்பிட்டைப் பூட்டிவிட்டு, கேப்டன் சுமித் மச்சார் மீது கத்தியால் தாக்குதல் நடத்தியுள்ளார். விமானத்தைக் கீழே மோதி விபத்துக்குள்ளாக்க உதவி விமானி முயன்றதாகக் கூறப்படுகிறது. படு காயமடைந்த நிலையிலும் கேப்டன் சுமித், உதவி விமானியை எதிர்த்து தைரியமாக சண்டையிட்டு, விமானத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயன்றுள்ளார்.

விமானம் திடீரென கீழ்நோக்கி சரிந்ததை அடுத்து, காக்பிட்டில் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த பயணி களும், மாற்று விமானிகளும் காக்பிட் கதவைத் திறந்து தாக்குதல் நடத்திய உதவி விமானியை மடக்கிப் பிடித்தனர். இதன் மூலம் விமானம் சவூதி அரேபியாவின் தபூக் விமான நிலையத்தில் அவசரமாகத் தரை இறக்கப்பட்டது.

குஜராத்தைச் சேர்ந்த கேப்டன் சுமித் மச்சார், முன்னதாக ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தில் 11 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.  சாதுரியமாக செயல்பட்டு 180-க்கும் மேற்பட்ட பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய இந்திய விமானிக்கு உலகளவில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *