சென்னை, அக்.1 நடப்பு நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில், நம் நாட்டின் 9 முக்கிய நகரங்களில் வீடுகள் விற்பனை 6 சதவீதம் சரிந்துள்ளதாகவும், சென்னையில் மட்டும் 17 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் ‘ப்ராப் ஈக்விட்டி’ ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரியல் எஸ்டேட் தரவு பகுப்பாய்வு நிறுவனமான ‘ப்ராப் ஈக்விட்டி’, சென்னை, பெங்களூரு, அய்தராபாத், மும்பை, நவி மும்பை, தானே, டில்லி என்.சி.ஆர்., புனே மற்றும் கொல்கட்டா ஆகிய 9 பெருநகரங்களின் ரியல் எஸ்டேட் சந்தைகளை கண்காணித்து வருகிறது. மழைக் காலம் காரணமாக புதிய வீடுகளை விற்பனைக்கு கொண்டு வருவதில் ஏற்பட்ட தயக்கம் மற்றும் பன்னாட்டுப் பொருளாதார நிச்சயமற்ற சூழலால் வீடு வாங்கும் ஆர்வம் குறைந்தது.
