உயர்கல்வியில் சேராத மாணவர்களுக்காக சென்னையில் ‘உயர்வுக்குப்படி’ சிறப்பு முகாம்

1 Min Read

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

சென்னை, அக். 01- தமிழ்நாட்டில் 100 சதவீத உயர்கல்வி சேர்க்கை என்பதை இலக்காக கொண்டு, 12-ஆம் வகுப்பு முடித்து இதுவரை உயர் கல்வியில் சேராத மாணவ, மாணவிகளையும் உயர்கல்வியில் சேர்ப்பதற்காக சென்னை மாவட்டத்தில் பள்ளிக்கல்வித் துறை மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் ஒருங்கிணைப்பில் ‘உயர்வுக்கு படி’ முகாமை, அசோக் நகர் மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் எஸ்.மாலதி ஹெலன் நேற்று (30.9.2026) தொடங்கி வைத்தார்.

இந்த முகாமில் அரசு கலைக் கல்லூரிகள், அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள், அரசு அய்டிஅய் நிறுவனங்களில் மாணவர்கள் நேரடி சேர்க்கை செய்யும் விதமாக அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.

415 மாணவ, மாணவிகள் பங்கேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. முகாமில் ஆட்சியர் மாலதி ஹெலன், மாணவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கிப் பேசுகையில், “ சென்னை மாவட்டத்தில் மொத்தம் உள்ள 86 அரசு மற்றும் ஆதிதிராவிடர் நல மேல்நிலை பள்ளிகளில் பயின்ற 14,204 மாணவ, மாணவிகளில் இதுவரை 415 மாணவ மாணவிகள் உயர்கல்வியில் சேரவில்லை என கண்டறியப்பட்டுள்ளது.

பள்ளிப்படிப்பை முடித்து கல்லூரியில் சேராமல் இடைநின்ற மாணவர்களை உயர்கல்விக்கு அனுப்புவதே இந்த முகாமின் நோக்கமாகும்.

டெக்ஸ்டைல், ஆட்டோமொபைல் துறைகளில் அய்டிஅய், பாலிடெக்னிக் படித்த மாணவர்கள் அதிகம் தேவைப்படுகிறார்கள்.

அவர்களுக்கு ஏராளமான வாய்ப்புகள் காத்திருக்கின்றன. இந்த முகாமை பயன்படுத்தி அனைத்து மாணவ மாணவிகளும் நேரடி சேர்க்கை பெற்று உயர்கல்வியை தொடர வேண்டும்.” என அறிவுறுத்தினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *