தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் தி.மு.க. குரல் கொடுக்கும்

1 Min Read

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

சென்னை, அக்.01- ‘தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாருக்கு எதிரான விவகாரத்தில், நாடாளுமன்றத்தில் எதிர்க் கட்சிகளின் நிலைப் பாட்டுக்கே திமுக ஆதரவளிக் கும்’ என்று தி.மு.க. செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங் கோவன் தெரிவித்துள்ளார்.

‘இண்டியா’ கூட்டணி தலைவர்களின் கூட்டம் டில்லியில் நேற்று (30.9.2026) நடைபெற்றது. அதில், ‘தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் உடனடியாகப் பதவி விலக வேண்டும்; அல்லது அவரைப் பதவியி லிருந்து நீக்குவதற்கான தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் கொண்டுவர வேண்டும்’ என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

இக்கூட்டத்தில் திமுக கலந்து கொள்ளவில்லை. இந்நிலையில் இதுகுறித்து, செய்தியாளர்களிடம் திமுக செய்தித் தொடர்பாளர் இளங்கோவன் கூறியதாவது: ‘இண்டியா’ கூட்டணி கூட்டம், இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை மாற்றவோ அல்லது பதவியிலிருந்து நீக்கவோ போவதில்லை. அதைச் செய்ய வேண்டியது நாடாளு மன்றம்தான்.

அங்கு திமுகவுக்கு கணிசமான எண்ணிக்கை யில் நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளனர். எனவே, இந்த தனிநபர் பிரச்சினை அவைக்கு வரும்போது, நாங்கள் ஞானேஷ்குமாருக்கு எதிராகவே நிற்போம் என்றார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *