தனியார் பேருந்து உரிமையாளர்கள் போராட்டம் தள்ளிவைப்பு!

1 Min Read

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

சென்னை, செப். 30- தமிழ்நாட்டில் மகளிருக் கான கட்டணமில்லாப் பேருந்து பயணத் திட்டத் துக்கு ‘வெற்றிப் பயணம்’ என்று பெயரிட்டுள்ளது. இத்திட்டத்தை அக்.2ஆம் தேதி முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார்.
இந்தத் திட்டத்தால் பாதிக் கப்படுவதாகவும் இலவசப் பேருந்து பயணத் திட்டத்தைத் தனியார் பேருந்துகளிலும் அமல்படுத்தி அதற்கான கட்டணத்தை அரசு மானியமாக வழங்க வேண்டும் என்றும் தனியார் பேருந்து உரிமையாளர்கள் சம்மேளத்தினர் வலியுறுத்தினர்.
இந்தக் கோரிக்கையை முன்வைத்து செப்.29ஆம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் 30ஆம் தேதி (இன்று) நள்ளிரவு 12 மணி வரை பேருந்துகளை இயக்காமல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்தனர்.
இந்நிலையில், தனியார் பேருந்து உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் தங்கராஜ் கூறும் போது, “எங்கள் கோரிக்கை களை வருவாய்த்துறை அமைச்சரும் போக்கு வரத்துத் துறை அமைச்சரும், பரிசீலிப்பதாக உறுதி அளித்துள்ளனர். இதன் காரணமாக வேலைநிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக தள்ளிவைக்கப் படுகிறது” என்று நேற்று (29.9.2026) தெரிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *