திருவாரூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பாக சமூக நீதி நாள் – பேச்சுப் போட்டி

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

திருவாரூர், செப். 30- தந்தை பெரியாரின் 148ஆம் பிறந்த நாளை முன்னிட்டு திருவாரூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பாக நடைபெற்ற சமூக நீதி நாள் பேச்சுப் போட்டி பகுத்தறிவாளர் கழக திருவாரூர் மாவட்ட தலைவர் அரங்க ஈவேரா தலைமையில் நடைபெற்றது.

சமூக நீதி நாள் பேச்சுப் போட்டியில் ஆசிரியர் தமிழ் நேயன் அனைவரையும் வரவேற்று வரவேற்புரை ஆற்றினார்.

தொடர்ந்து ஓய்வு பெற்ற நல்லாசிரியர் முனியாண்டி, நல்லாசிரியர் தலைமை ஆசிரியை செந்தமிழ்ச்செல்வி, தலைமை ஆசிரியர் நாகராஜன், மாவட்ட கழகத் துணைச் செயலாளர் கரிகாலன், திருவாரூர் மாவட்ட கழக இளைஞரணி தலைவர் ரவிக்குமார், திராவிட மாணவர் கழக மாவட்ட செயலாளர் அறிவுச்சுடர், மாவட்ட கழகச் செயலாளர் பிளாட்டோ உள்ளிட்டோர் வாழ்த்துரையும் பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் அரங்க ஈவேரா தலைமை உரையாற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.

வெற்றி பெற்ற மாணவர்களின் விவரம்.

பள்ளி மாணவர்கள்

1.முதல் பரிசு ரஞ்சித் அரிஸ்டோ ரா. ஒன்பதாம் வகுப்பு, வேலுடையார் மேல்நிலைப்பள்ளி திருவாரூர்.

  1. க.கோகுலசிறீ. எட்டாம் வகுப்பு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சின்னவேங்காவயல் காரைக்குடி.
  2. கோ.மகாபாரணி. ஏழாம் வகுப்பு வேலுடையார் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி திருவாரூர்.
  3. எஸ்.நூர்ஜஹான், பன்னிரண் டாம் வகுப்பு, ஜி.ஆர்.எம். பெண்கள் மேல் நிலைப் பள்ளி திருவாரூர்.

கல்லூரி மாணவர்கள்

  1. முதல் பரிசு. த.பிரின்சி, இளங்கலை தமிழ் மூன்றாம் ஆண்டு, திருவிக அரசு கலைக் கல்லூரி திருவாரூர்.
  2. இரண்டாம் பரிசு. ஆ.அபி ஷேக் அருள் டேனியல். கணினி பயன்பாட்டிகள் மூன்றாம் ஆண்டு, அரசினர் கலைக்கல்லூரி கும்பகோணம்.
  3. மூன்றாம் பரிசு. யாஸ்மின் பேகம்.ந. பிபிஏ, மூன்றாம் ஆண்டு, எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம் திருச்சி.

வெற்றி பெற்ற மாணவர்களுக்கும்.. கலந்து கொண்ட மாணவர்களுக்கும் நடைபெற்ற பேச்சு போட்டியில் நடுவர்களாக பங்கேற்ற நல்லாசிரியர் முனியாண்டி, நல்லாசிரியர் செந்தமிழ் செல்வி, கணித ஆசிரியர் தமிழ்நேயன் உள்ளிட்டோருக்கும் பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பாக சிறப்பு செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து சமூக நீதி நாள் பேச்சுப் போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் பாராட்டு சான்றிதழ் மற்றும் பதக்கம் அணிவித்து வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.  நடைபெற்ற நிகழ்ச்சிகளை திராவிட மாணவர் கழக திருவாரூர் மாவட்ட தலைவர் வே.அறிவழகன் தொகுத்து வழங்கினார்.

நிகழ்வின் இறுதி திராவிட மாணவர் கழக திருவாரூர் மாவட்ட செயலாளர் அ. அறிவுச்சுடர் அனைவருக்கும் நன்றி கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *