மயிலாடுதுறை, செப். 29- தந்தை பெரியார் அவர்களின் 148ஆவது பிறந்தநாளை (17.9.2026) முன்னிட்டு 27.09.2026 அன்று காலை 6.30 மணிக்கு மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் மாவட்டத் தலைவர் கடவாசல் குணசேகரன் தலைமையில் மயிலாடுதுறை தியாகி சாரங்கபாணி ரயில்வே மேம்பாலத்தி லிருந்து திருவாரூர் சாலை பெரியார் சிலை வரை பெரியார் நடை (PERIYAR WALK) நடைபெற்றது.
மயிலாடுதுறை கி.தளபதிராஜ் நிகழ்ச்சியை தொடங்கி வைக்க மாவட்ட துணைத் தலைவர் ஞான.வள்ளுவன், கழக காப்பாளர் சா.முருகையன், குத்தாலம் தலைவர் சா.ஜெகதீசன், மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் இரெ.செல்ல துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேற்படி நிகழ்வில் மயிலாடுதுறை நகர கழக தலைவர் சீனி.முத்து, செயலா ளர் பூ.சி.காமராஜ், ஒன்றிய தலைவர் அ.சாமிதுரை, கொள்ளிடம் ஒன்றிய தலைவர் பூ.பாண்டுரங்கன், குத்தாலம் ஒன்றிய செயலாளர் தி.சபாபதி, வைத்தீஸ் வரன்கோயில் பேரூராட்சி தலைவர் அ.முத் தையன், மாவட்ட இளைஞரணி தலைவர் க.அருள்தாஸ், மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் தங்க.செல்வராஜ், தோழர்கள் சே.ஆராமதி, கே.ஜி.நாகராஜன், பி.இராஜேந்திரன், சாமி.கணேசன், ஜீவன்ராஜ், தமிழ் மணி, மணிமாறன், எஸ்.கார்த்திகேயன், கடவாசல் நாகராஜ் வினோத், ஜோதி, சுகுமார் விடுதலை வாசகர் வட்ட தலைவர் ஜெகன்.சாமிக்கண்ணு, விவசாய அணி அமைப்பாளர் கு.இளஞ்செழியன், திமுக பொறுப்பாளர்கள் கொக்கூர் கலைக்குமார், வை.கோயில் கமலநாதன், பெரியார் பிஞ்சுகள் தமிழ்மணி, தமிழ் நிலவன், தமிழ் இசை வெண்பா, செந்தமிழ், இனிய.நகுலன் மற்றும் திராவிடர் கழக, பகுத்தறிவாளர் கழக, பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற தோழர்கள் கலந்துகொண்டனர்.
மாவட்ட செயலாளர் கு.இளமாறன் நன்றி கூறினார்.
