குடியாத்தம் புவனேஸ்வரி பேட்டை லிட்டில் பிளவர் மெட்ரிகுலேஷன் பள்ளியில் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் 148ஆம் பிறந்தநாள் நாள் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. பள்ளியின் தாளாளரும், மாவட்ட கழக காப்பாளருமான வி.சடகோபன் அவர்களும், மகளிரணி ஈஸ்வரி, மாவட்ட கழக தலைவர் வி.இ.சிவக்குமார், பொதுக்குழு உறுப்பினர் சி.இலதா ஆகியோர் கலந்து கொண்டு, ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் இனிப்புகள் வழங்கி சிறப்பித்தனர். பள்ளியின் செயலாளர் ச.ரம்யா கண்ணன் தலைமை வகித்தார். பள்ளியின் முதல்வர் பி.சாந்தி அனைவரையும் ஊக்கப்படுத்தினார். பள்ளியில் மாணவர்களுக்கு நடைபெற்ற ஓவியப் போட்டி மற்றும் பேச்சு போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ், பரிசுப் பொருள் மற்றும் இனிப்பு வழங்கினர்.
தந்தை பெரியார் பிறந்தநாள் – பேச்சு, ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசளிப்பு
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
