கன்னியாகுமரி, செப். 29- தந்தை பெரியாரின் 148ஆவது பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி இரணியலை அடுத்த ஆழ்வார் கோயில் உமா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் உ.சிவ தானு தலைமை தாங்கினார். திராவிடர் கழக மாவட்ட தலைவர் மா.மு.சுப்பிரமணியம், கழக மாவட்ட துணைத் தலைவர் ச.நல்லபெருமாள், அமைப்புசாரா தொழிற்சங்க துணைச் செயலாளர் தா.ஜெபராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட கழகச் செயலாளர் கோ.வெற்றிவேந்தன் தொடங்கி வைத்தார். பள்ளி தாளாளர் மகாதேவன் போட்டியினை ஒருங்கிணைத்தார். ஏராளமான மாணவ மாணவியர்கள் போட்டியில் கலந்து கொண்டு பேசினர். வைக்கம் போராட் டத்தில் தந்தை பெரியார், பெரியாரின் பெண்ணுரிமை சிந்தனைகள், பெரியார் எனும் உலகத் தலைவர், சுயமரியாதை இயக்கத்தில் அனைவருக்கும் அனைத்தும், தமிழுக்கு தந்தை பெரியாரின் பங்களிப்பு, என்றும் தேவை பெரியார் போன்ற தலைப்புகளில் போட்டி நடைபெற்றது. பெரியார் தாஸ் பகுத்தறிவாளர் கழக மாவட்ட செயலாளர் நன்றி கூறினார்.
