திண்டுக்கல் மாவட்டம் கொடைரோட்டில் ஒரே நாளில் 3 கோயில்கள் இடித்து அகற்றம்!

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

திண்டுக்கல் செப். 28– பொதுப்பாதையை ஆக்கிரமித்து கட்டப்படும் கட்டடங்கள் நீதிமன்ற உத்தரவின்படி அகற்றப்பட்டு வருகின்றன. அந்த வகையில், திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூரில் பொதுப்பாதையை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருந்த 3 கோயில்களை வருவாய்த்துறையினர் இடித்து அகற்றினர்.

வண்டிப்பாதை ஆக்கிரமிப்பு

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே, அம்மையநாயக்கனூர் காவல் நிலையம் எதிரே சிறுமலை கிழக்கு தோட்டத்திற்குச் செல்லும் பொது வண்டிப்பாதை உள்ளது. இங்குச் சீலைக்காரி அம்மன், சோனை கருப்புசாமி, வீரகாளியம்மன் ஆகிய 3 சிறிய கோயில்கள் இருந்தன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இக்கோயில்கள் பெரிதாகக் கட்டப்பட்டு, குட முழுக்கு நடத்தப்பட்டது. இதனால் நாள்தோறும் பக்தர்கள் வந்து வழிபட்டுச் சென்றனர்.

இந்நிலையில், இக்கோயில்கள் பொதுப்பாதையை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ளதாக அம்மையநாயக்க னூரைச் சேர்ந்த ராஜராஜ சோழன் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, பாதையை ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட 3 கோயில்களையும் இடித்து அகற்ற உத்தர விட்டார்.

பொக்லைன் எந்திரம் மூலம் இடிப்பு

நீதிமன்ற உத்தரவின்படி, நிலக்கோட்டை வட்டாட்சியர் (தாசில்தார்) ராமசாமி, அம்மையநாயக்கனூர் பேரூராட்சி செயல் அலுவலர் (பொறுப்பு) இளவரசி ஆகியோர் தலைமையில் 3 கோயில்களின் கட்டடங்களும் பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் இடித்து அகற்றப்பட்டன. தொடர்ந்து, கோயில்களில் இருந்த சுவாமி சிலைகள் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டன. காவல்நிலைய உதவி ஆய்வாளர் சேகர் தலைமையில் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *