திரைப்படங்களைப் பார்ப்பதைவிட புத்தகங்களை வாசிப்பது கற்பனைத்திறமையை விரிவடையச் செய்யும்! மயில்சாமி அண்ணாதுரை கருத்து

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

சென்னை, செப். 28- குழந்தைகளிடம் புத்தக வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்க வேண்டும் என சென்னையில் நடந்த ‘சடவு’ நூல் வெளியீட்டு விழாவில் இஸ்ரோ விஞ்ஞானி மயில் சாமி அண்ணாதுரை வலியுறுத்தினார்.

‘எழுத்து’ தமிழிலக்கிய அமைப்பு, இளம் எழுத் தாளர்களை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ‘திருமதி சவுந்தரா கைலாசம் இலக்கியப் பரிசு’ எனும் பெயரில் நாவல் போட்டி நடத்தி வருகிறது. 3 பேர் கொண்ட நடுவர் குழு அமைக்கப்பட்டு, சிறந்த நாவல்களை தேர்ந்தெடுத்து பரிசளிக் கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2025ஆம் ஆண்டுக்கான ‘திருமதி சவுந்தரா கைலாசம் இலக்கியப் பரிசை’ எழுத்தாளர் செ.ஏக்நாத்ராஜ் எழுதிய ‘சடவு’ நாவல் பெற்றுள்ளது.

இலக்கியப் பரிசு

இதற்கான பரிசுத் தொகை வழங்கும் நிகழ்ச்சி, எழுத்து அமைப்பு மற்றும் ‘கவிதா பதிப்பகம்’ சார்பில் சென்னை தியாகராயர் நகரில் 26.9.2026 அன்று நடைபெற்றது. நூலாசிரியர் செ.ஏக்நாத் ராஜுக்கு ரூ.2 லட்சத்துக்கான காசோலை மற்றும் விருது பட்டயத்தை முன்னாள் ஒன்றிய அமைச்சரும், எம்.பி.யுமான ப.சிதம்பரம் வழங்கினார்.

அதைத்தொடர்ந்து ‘சடவு’ நாவலின் முதல் பிரதியை தமிழ்நாடு பாடத்திட்ட வரைவுக் குழு தலை வரான இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை வெளியிட, கவிஞர் வைரமுத்து பெற்றுக்கொண்டார். கவிதா பதிப்பகம் சேது.சொக்கலிங்கம் வரவேற்புரையாற்ற, நடுவர் குழு சார்பாக எழுத்தாளர் என்.சிறீராம் நூல் அறிமுக உரையும், எழுத்தாளர் அ.வெண்ணிலா நூல் மதிப்புரையும் வழங்கினர்.

நிகழ்ச்சியில் விஞ்ஞானி மயில் சாமி அண்ணாதுரை பேசியதாவது: சோர்வில்லாத வாசிப்பு அனுபவத்தை ‘சடவு’ தருகிறது. ஒரு குடும்ப அமைப்புக்குள் தலைமுறை தலைமுறையாக பெண்கள் சந்திக்கும் சவால்கள், அவர்களின் உரிமைப் போராட்டங்களை இந்த நாவல் மிகச் சிறப்பாக பதிவு செய்துள்ளது. குறிப்பாக, தந்தை சம்பாதித்த சொத்தில் பெண் குழந்தைகளுக்கும் சமபங்கு உண்டு என்பதை நிலை நாட்டுவதற்காக போராடி வெற்றி பெறும் ஒரு பெண்ணின் கதை, வாசகர்களிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

புதிய சமுதாயத்தை…

திரைப்படங்களை பார்ப்பதை விட புத்தகங் களை வாசிப்பது மனிதர் களின் கற்பனைத் திறனை பன்மடங்கு விரிவடையச் செய்யும். ஒரு நாவலை வாசிக்கும் போது அதற்கான காட்சிகளையும் பின்னணி இசையையும் வாசகர்களே தங்கள் கற்பனையில் உருவாக்கிக் கொள்ளும் சுதந்திரம் வாசிப்பில் மட்டுமே உள்ளது. எனவே, புதிய சமுதாயத்தை உருவாக்கும் ஊக்கமளிக்கும் படைப்புகளை பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுத்து, வாசிப்பு பழக்கத்தை அவர்களிடம் விதைக்க வேண்டும். இவ்வாறு அவர் வலியுறுத்தினார்.

முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் பேசும்போது, “இந்த பரிசுக்கான நாவலை தேர்ந்தெடுக்கும் நடுவர் குழுவில் பணியாற்றுவது என்பது எளிதான வேலை அல்ல. கருத்தொற்றுமை இல்லாமல் இந்த உலகத்தில் எந்தவொரு சிறப்பான முடிவையும் எடுக்க முடியாது. தமிழ்நாட்டில் உள்ள தமிழ் எழுத்தாளர்களுக்கும், அறிஞர்களுக்கும் விழாக்கள் எடுத்து அவர்களது படைப்புகளை கொண்டாட வேண்டும்” என்றார். இந்நிகழ்வில் எழுத்து அமைப்பின் அறங்காவலர் கார்த்திக் சிதம்பரம், கவிஞர் இலக்கியா நடராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *