புதிய தலைமைச் செயலகம்: எதிர்ப்புத் தெரிவித்து பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

சென்னை, செப்.27  சென்னை பட்டினப் பாக்கத்தில்  ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் புதிய தலைமைச் செயலக வளாகம் அமைப்பதற்கான தமிழ்நாடு அரசின் திட்டத்திற்கு எதிராக தென் மண்டல தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

வழக்குரைஞர் விஜய் ஆனந்த் என்பவர் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார். கடலோர ஒழுங்குமுறை மண்டல மதிப்பீடுகள், முறையான சுற்றுச்சூழல் தாக்கம் குறித்த ஆய்வுகளை மேற் கொள்ளாமல் இந்த இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள் ளது. மேலும், சுற்றுச்சூழல் அனுமதி இன்றி கடற்கரையை ஒட்டிய பகுதியில் இத்தகைய பெரிய கட்டுமானப் பணிகளை மேற்கொள்வது சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வாரி யத்தின் விதிகள், ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சின் வழிகாட்டுதல்களுக்கு எதி ரானது என்றும் தெரி விக்கப்பட்டுள்ளது.

கடற்கரைச் சூழலியல் மண்டலத்தில் மிகப்பெரிய கட்டடம் கட்டப்படுவதால் கடல்வாழ் உயிரினங்களும், கடலோரச் சுற்றுச்சூழலும் கடுமையாகப் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக மனு தாரர் தரப்பில் வாதிடப் பட்டுள்ளது. சுற்றுச்சூழல் விதிகளுக்குப் புறம்பாகத் தேர்வு செய்யப்பட்ட இந்தத் திட்டப்பணிகளுக்கு உடனடியாக இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக் கப்பட்டுள்ளது. இந்த வழக்கு பசுமைத் தீர்ப் பாயத்தில் விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *