2025 செப்டம்பர் 27 அன்று கரூர் வேலுச் சாமிபுரத்தில் (கரூர்–ஈரோடு சாலை) நடைபெற்ற த.வெ.க. தலைவர் ஜோசப் விஜய்யின் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
விஜய் வருவதற்குப் பல மணி நேரம் தாமத மானதால், கூட்ட நெரிசலாலும், அடிப்படை வசதிகள் இன்மையாலும், நெடு நேரமாகக் கடும் வெய்யிலில் அவர்கள் காத்திருக்க வைக்கப்பட்டிருந்த சூழலில், வாகனம் வந்தபோது மக்கள் திடீரென திரண்டதால், ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பலத்த உயிர்ச்சேதம் நேரிட்டது. தனது பேச்சைப் பாதியில் நிறுத்தி விட்டு, உடனடியாகத் திருச்சி வழியாகச் சென்னை திரும்பினார் நடிகர் விஜய். இந்நிகழ்வு நடந்து இன்றுடன் (செப்டம்பர் 27, 2026) ஓராண்டு நிறைவடைந்துள்ளது. வழக்கு சி.பி.அய். விசாரணையில் உள்ளது.
