குற்றாலம் பெரியாரியல் பயிற்சிப் பட்டறையின் விளைச்சல்

1 Min Read

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

சிதம்பரம், செப். 27- 14.09.2026 காலை 10 மணியளவில் சிதம்பரம் கழக மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.

கலந்துரையாடல் கூட்டத்தில் எப்போதுமே பார்த்த முகமே பார்த் துக் கொண்டிருந்த சூழ் நிலையில். புதிய முகங்கள் இளைஞர்கள் பட்டாளம்.

சிதம்பரம் மாவட்டத் திற்கு புதிய முகமாக இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள்,  திராவிடர் கழகத்தில் இணைந்தனர்.

அவர்களை அறிமுகம் செய்து கொள்ளுங்கள் என்று அழைத்தபோது. (பேசுகையில்) நாங்கள் அனைவருமே குற்றாலம் பயிற்சிப் பட்டறையில் 4 நாட்களும்  பயிற்சி பெற்றவர்கள்.

மாவட்ட அளவிலும் சிதம்பரம், மயிலாடுதுறை, காரைக்கால் மாவட்டங் களிலும் பயிற்சிப் பட்டறையில் கலந்து கொண் டோம். தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, அவர்களை நேரடியாக பார்த்ததில் பெரும் மகிழ்ச்சி அடைந்தோம். பயிற்சிப் பட்டறை பெரும் தாக்கத்தையும், எங்களுக்குள் மாபெரும் மாற்றத்தையும் ஏற்படுத்தியது.

தலைமை ஆசிரியர் போன்று மாநில ஒருங்கி ணைப்பாளர் இரா.ஜெயக்குமார் எங்களை வழிநடத்தினார்.

அடிக்கடி தொடர்பு கொண்டு எங்களுடன் பேசிய மாநில இளைஞ ரணிச் செயலாளர் நாத்திக.பொன்முடி, இவர்தான் இந்த கலந்துரையாடல் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார். திராவிடர் கழகத்தில் இணைவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம்.

முதல்முறையாக பெரியார் பிறந்த நாளிலிருந்து பணியைத் துவங்குகிறோம் காட்டு மன்னார்குடியில் பெரியார் படம் ஊர்வலம் மாலைப் பொதுக்கூட்டம் மிக சிறப்பாக நடத்துவோம் என உறுதியளித்துள்ளனர்.

இயக்கத்தில் தங்களை இணைத்துக்கொண்ட இளைஞர்கள்:

இரா.சத்தியபிரியன், எம்.எஸ்.குகன், சீ.அன்புவேலன், ச.அபினாஷ்,  வே.வேல்முரு கன்,  ப.அஸ்வின், தி.தீனா.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *