செவிலியர்கள் தற்கால முறை நியமனம் செப்டம்பர் 28ஆம் தேதி முதல் போராட்டம்!

1 Min Read

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

சென்னை, செப். 26- தற்காலிக முறையில் செவிலியர்கள் நியமிக்கப்படுவதைக் கண்டித்து, வரும் 28ஆம் தேதி முதல் தொடர் போராட்டத்தை செவிலியர்கள் அறிவித்துள்ளனர்.

இது தொடர்பாக தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டுச் சங்கத்தின் செயலர் சுபின் கூறியதாவது: புதிய செவிலியர் மருத்துவக் கல்லூரிகள் கட்ட ரூ.270 கோடி உட்பட பல்வேறு பணிகளுக்கான நிதியை தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம்தான் திரட்ட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்படியென்றால், அதற்கு நியமிக்கப்படும் பணியிடங்களுக்கும் தற்காலிக முறையில்தான் இருக்கும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தற்போது, 4,724 செவிலியர்கள் தற்காலிக முறையில் நியமிக்கப்பட உள்ளனர்.

ஒப்பந்தப் பணியாளர்கள் 5 ஆண்டுகளுக்குள் பணி நிரந்தரம் செய்யப்படுவர் என்று தேர்தலின் போது தவெக அரசு வாக்குறுதி அளித்திருந்தது. தற்போது அனைத்துப் பணியையும் ஒப்பந்தம் மற்றும் தற்காலிக முறையில் நியமித்து வருகிறது.

இதனைக் கண்டித்தும், நிரந்தர அடிப்படையில் பணி நியமனத்தை வலியுறுத்தி வரும் 28, 29ஆம் தேதிகளில் கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்ற இருக்கிறோம். சென்னை சிவானந்தா சாலையில் அடையாள உண்ணாநிலைப் போராட்டம் 30ஆம் தேதி நடைபெறும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *