பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் தொடங்கப்பட்ட நாள் இன்று (23-09-1952)
பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் தந்தை பெரியார் அவர்களால் (Periyar Self-Respect Propaganda Institution) செப்டம்பர் 23, 1952 அன்று பதிவு செய்யப்பட்டு தொடங்கப்பட்டது. இந்நிறுவ னத்தின் தலைவராகத் தந்தை பெரியார் இருந்து வந்தார். சங்கங்கள் பதிவுச் சட்டம் XXI, 1860-இன் கீழ் பதிவு செய்யப்பட்டது. பகுத்தறிவு சிந்தனைகளைப் பரப்புதல் மற்றும் சமூக சீர்திருத்தப் பணிகளை மேற்கொள்ளுதல் இந்நிறுவனத்தின் நோக்கமாகும். அதன் பணி அவருக்குப்பின் தொடர்ந்து வருவதுடன், விரிவடைந்து வருகிறது.
‘சம இரவு – பகல் நாள்’ இன்று (23.9.2026)
சம இரவு சம பகல் (Equinox) என்பது கதிரவன் நிலநடுக்கோட்டினை கடந்து செல்லும் நாளாகும். ஆண்டுக்கு இருமுறை கதிரவன் இவ்வாறு நிலநடுக்கோட்டினை கடப்பது நிகழும்.. இந்நாட்களில் இரவும் பகலும் ஒரே அளவாக (ஏறத்தாழ 12 மணி நேரம்) இருக்கும். இலத்தீனில் ஈக்வீநாக்சு என வழங்கப்படுகிறது. ஈக்வீ (equi) எனபது சமம் என்றும் நாக்சு (nox) என்பது இரவு என்றும் பொருள்படும்.
சம இரவு நாட்கள் உலகின் எந்த ஒரு இடத்திலும் என்று நிகழும் என்பது நிலநடுக்கோட்டிலிருந்து எத்தனை தொலைவு தள்ளி அளக்கப்படுகிறது என்பதைப் பொறுத்தது. சாதாரணமாக மார்ச்சு 21அன்றும் செப்டம்பர் 23 அன்றும் இவை நிகழும்.
