ஓசூர், செப். 22- தந்தை பெரியார் 148ஆம் பிறந்தநாள் கொள்கை விளக்கக் பொதுக் கூட்டம் 21.9.2026 அன்று மாலை 5.30 மணியளவில் ஒசூர் உள்வட்டச் சாலை தந்தை பெரியார் சதுக்கத்தில் மாவட்ட தலைவர் சு.வனவேந்தன் தலைமை யில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் மாநகரச் செயலாளர் ரமேஷ் வரவேற்றார். திராவிடர் கழக சொற்பொழிவாளர் தஞ்சை பெரியார் செல்வன் தந்தை பெரியார் ஆற்றிய தொண்டுகளையும் அதன் சிறப்புகளையும் விளக்கி ஒரு மணி நேரம் சிறப்புரையாற்றினார்.
இந் நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் அ.செ.செல்வம், மாவட்ட மகளிர் பாசறைத் தலைவர் செல்வி, மாவட்ட துணைச் செயலாளர்கள் இரா.செயசந்திரன், ச.எழிலன், மாவட்ட இளைஞரணித் தலைவர் டார்வின் பேரறிவு, செயலாளர் மதிவாணன், மேனாள் சட்டக்கல்லூரி திராவிட மாணவர் கழக துணை அமைப்பாளர் வழக்குரைஞர் க.கா.வெற்றி, திமுக பொறியாளர் அணி மாநில துணை அமைப்பாளர் ஞான சேகரன், மனித நேய மக்கள் கட்சி மாவட்டத் தலைவர் ஜாகீர் ஆலம், 35 வார்டு திமுக வட்டச் செயலாளர் வடிவேல், ஜீவா, புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி சின்ன சாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
