திருச்சி, செப். 19- 11-09-2026 அன்று காலை 11.00 மணிய ளவில் திருச்சி பெரியார் மாளி கையில் திருச்சி மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.
மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், தலைமை வகித்து கூட்டத்தின் நோக்கங் களை விளக்கி பேசினார். மாவட்டத் தலைவர் ஞா.ஆரோக்கியராஜ் மாவட்ட செயலாளர் சு.மகாமணி, மாநில தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் வி.சி. வில்வம் மாநில தொழிலாளர் அணிச் செயலாளர் மு.சேகர் மாநில இளைஞர் அணிச் செயலாளர் நாத்திக.பொன்முடி ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர். கழக சொற்பொழிவாளர் வழக்குரைஞர் பூவை.புலிகேசி கருத்துகளை தெரிவித்தனர்.
மாநில மகளிர் பாசறை துணைச் செயலாளர் க. அம்பிகா, லால்குடி மாவட்டச் செயலாளர் அங்கமுத்து, மாவட்டத் துணைத் தலைவர் துரைசாமி, மாவட்ட துணைச் செயலாளர் சு.ராஜசேகர், பொதுக்குழு உறுப்பினர்கள் சங்கிலி முத்து, கனகராஜ், மாநகரத் தலைவர் ராமதாஸ், பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் ப. லெ.மதிவாணன், பகுத்தறிவாளர் கழக மாநகரச் செயலாளர் பென்னி, மணப்பாறை ஒன்றியத் தலைவர் பாலமுருகன், மணப்பாறை ஒன்றியச் செயலாளர் அசோக், திருவரங்கம் நகரச் செயலாளர் முருகன் மகளிர் அணி மாவட்டத் தலைவர் ரெஜினா பால்ராஜ், மகளிர் பாசறை மாவட்டத் தலைவர் ரூபாயா-ஸ்டாலின், ஜெயில் பேட்டை அமுதா, மகளிர் பாசறை மாவட்ட செயலாளர் சங்கீதா, மகளிர் அணி மாவட்ட செயலாளர் சாந்தி, மகளிர் அணி மாவட்ட துணைத் தலைவர் வசந்தி மகளிர் அணி மாநகர தலைவர் பேபி துவாக்குடி கங்காதரன், திருவெறும்பூர் ஒன்றிய செயலாளர் தமிழ்ச்சுடர், விடுதலை செல்வம், வையம்பட்டி ஒன்றிய செயலாளர் சக்தி, ஆகியோர் கலந்துக் கொண்டு கருத்துகளை தெரிவித்தனர்.
மாநில மாணவர் கழகத் துணைச் செயலாளர் ஆ.அறிவுச் சுடர், நிகழ்வினை ஒருங்கிணைத்து இறுதியாக நன்றி கூறினார்.
கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
செப்டம்பர்-3 அன்று சென்னை பெரியார் திடலில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, அவர்கள் தலை மையில் நடைபெற்ற கழகச் செயற்குழு கூட்ட தீர்மானத்தினை ஏற்று செயல்படுத்துவது என முடிவு செய்யப்பட்டது.
அக்டோபர்-2 கடைவீதியில் “பெரியார் கேட்கும் கேள்வி” புத்தகம் பரப்புரை செய்தல். மேற்கண்ட நிகழ்வுகளை திருச்சி மாவட்டத்தில் மாவட்டத்தில் வெகு சிறப்பாக நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
