திருச்சி, செப். 20- தந்தை பெரியாரின் 148 ஆம் பிறந்த நாள் விழா லால்குடி கழக மாவட்டம் முழுவதும் மகிழ்ச்சியாக கொண்டாடப்பட்டது. கழக மாவட்டத்தில் உள்ள அனைத்து கொடிக் கம்பங்களிலும் கழகத் தோழர்கள் கழக லட்சியக் கொடியை ஏற்றி வைத்து இனிப்பு வழங்கி மகிழ்ந்தனர்.
டாடா ஏசி வாகனத் தில் தந்தை பெரியார் படத்தை அலங்கரித்து ஊர்வலமாக கொண்டு சென்றனர். 300 இனிப்பு பெட்டிகள் வரவழைக் கப்பட்டு பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தோழர்கள், நண்பர்கள், ஜாதி ஒழிப்பு, சட்டம் எரிப்பு வீரர்கள் குடும்பத்தினர் ஆசிரியர்கள் அரசு அலுவலர்கள் பொது மக்கள் என அனைவருக் கும் வழங்கப்பட்டது. சிறுகனூர் பெரியார் உல கத்தில் கழகக் கொடியினை தோழர்கள் ஏற்றி வைத்து முழக்கங்கள் எழுப்பினர். அனைவருக்கும் புலால் உணவினை பெருவளப்பூர் பன்னீர்செல்வம் வழங்கினார்.
இந்நிகழ்வில் லால்குடி மாவட்டக் காப்பாளர்கள் வால்டர் மற்றும் ஆல்பர்ட், மாவட்டத் தலைவர் அன்புராஜா, மாவட்டச் செயலாளர் அங்கமுத்து, மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் பால சுப்ரமணியம், மாவட்டத் தொழிலாளர் அணித் தலைவர் பாச்சூர் அசோகன், மாவட்டத் துணை தலைவர், பொதுக் குழு உறுப்பினர்கள் செம்பரை தர்மராஜ் மற்றும் முத்துசாமி, ஆசைத்தம்பி, மாவட்ட துணைச் செயலாளர் சித்தார்த்தன் மாவட்ட இளைஞர் அணித் தலைவர் பனிமலர் செல்வன், இளைஞர் அணிச் செயலாளர் இசைவாணன், மாவட்ட மாணவர் கழகத் தலைவர் அவனிகோ இளந்திரையன், வீரமணி, வான்முடி வள்ளல், பன்னீர் செல்வம், மோகன், லூகாஸ், சரவணன், லால்குடி ஒன்றியச் செயலாளர் பிச்சைமணி, லால்குடி ஒன்றிய துணைத் தலைவர் சண்முகசுந்தரம், விஸ்வேஸ்வரன், விஷால், குரூராஜ், கோபாலகிருஷ்ணன், வள்ளியப்பன், மண்ணச்ச நல்லூர் ஒன்றிய தலைவர் பெரியசாமி, மண்ணச்ச நல்லூர் முன்னாள் ஒன்றிய செயலாளர் பாவேந்தர், மண்ணச்சநல்லூர் நகர தலைவர் பாலசந்தர்,மகளிர் அணி வசந்தி அசோகன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
