விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோயில் உண்டியல் கொள்ளையடிக்கப்பட்டது!

இணையவழி கையெழுத்து இயக்கம்

விருத்தாசலம், செப். 19- கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே மணவாளநல்லூரில் உள்ள அருள்மிகு கொளஞ்சியப்பர் திருக்கோயிலில், நள்ளிரவில் புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள் கோயில் உண்டியலை உடைத்து ரொக்கப் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
கடந்த வெள்ளிக் கிழமை காலை வழக்கம்போல் கோயிலைத் திறக்க வந்த ஊழியர்கள், உண்டியல் உடைக்கப்பட்டுப் பணம் திருடப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந் தனர். உடனடியாக இதுகுறித்து கோவில் நிர்வாகத்திற்கும், விருத்தாசலம் காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்தத் திருட்டு தொடர்பாக காவல்துறை யினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோயிலில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, கொள்ளைச் நிகழ்வில் ஈடுபட்ட நபர்களைப் காவல் துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இந்நிகழ்வு அப்பகுதி மக்களிடையேயும் பக்தர்களிடையேயும் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *