செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் அடுத்த பெருங்கரணை கிராமத்தில் மரகத தண்டாயுதபாணி கோயில் உள்ளது. மரகதம் என்பது விலைமதிப்பற்றது. கடந்த முதல் தேதி வழக்கம் போல் கோயில் பூசாரிகள் கோயிலின் நடையை சாத்தி விட்டுச் சென்றனர். மறுநாள் பூஜைக்காக கோயில் திறக்கப்பட்ட போது கோயிலின் கருவறையில் இருந்த விலைமதிப்பற்ற மரகத கல்லாலான தண்டபாணி சிலை காணப்படவில்லை. அர்ச்சகர்கள் அதிர்ச்சி யடைந்தனர். பக்தர்கள் பதற்றமடைந்தார்.
அந்தோ பரிதாபம்! உருவச்சிலைக்கு எந்த சக்தியும் இல்லை என்பதை அறியாத பக்தர்களை என்ன சொல்ல?
கடைசியில் காவல்துறையில் தஞ்சம் அடைந்து கடவுள் சிலையை மீட்டுக் கொடுக்க பக்தர்கள் கெஞ்சினர்!
