பெரியார் மெட்ரிக் பள்ளி அலுவலக பணியாளர் சு.நடராஜ் (வயது 52) நேற்று (13.09.2026) மதியம் 2 மணியளவில் மாரடைப்பால் காலமானார் . அவரது உடல் இன்று (14.09.2026) காலை 10 மணியளவில் அடக்கம் செய்யப்பட்டது. அவருக்கு மனைவி ந.அபிராமி, மகள்கள் ந.கிருத்திகா, ந.சுதர்சனா ஆகியோர் உள்ளனர் .
பெரியார் பள்ளிகளின் தாளாளர் வீ.அன்புராஜ் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நடராஜ் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார். கல்வி வளாக ஒருங்கிணைப்பாளர், பெரியார் பள்ளிகளின் முதல்வர்கள், ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் திருச்சி மாவட்ட திராவிடர் கழக தலைவர், கழகப் பொறுப்பாளர்கள் அனைவரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
